Day: March 6, 2019

பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தினார் அபிநந்தன் – அதிகாரப்பூர்வமாக அறிவித்தது இந்திய விமானப்படை

March 6, 2019

விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானின் எப்.16 விமானத்தை சுட்டு வீழ்த்தினார் என்பதை இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது. கடந்த மாதம் 27-ம் தேதி இருதரப்பு இடையே வான்பகுதியில் நடந்த மோதலில் மிக்21 ரக விமானத்தில் சென்ற இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் ஏவிய ஆர்-73 ஏவுகணை பாகிஸ்தானின் எப். 16 விமானத்தை தாக்கி வீழ்த்தியதாக இந்திய விமானப்படை அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. இதே நேரத்தில் எப்-16 ரக விமானத்தில் இருந்து பாகிஸ்தான் விமானப்படை ஏவிய அம்ராம் […]

Read More

காஷ்மீரில் தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகளின் பதுங்கு குழி கண்டறியப்பட்டது

March 6, 2019

காஷ்மீரின் சோபியான் நகரில் நடந்த தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகளின் பதுங்கு குழி கண்டறியப்பட்டு உள்ளது. காஷ்மீரின் சோபியான் நகரில் கங்னூ என்ற கிராமத்தில் அந்நகர போலீசார் மற்றும் 44 ராஷ்டீரிய ரைபிள் படை பிரிவினர் இணைந்து தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில், தீவிரவாதிகளின் பதுங்கு குழி ஒன்று அப்பகுதியில் கண்டறியப்பட்டு உள்ளது. தொடர்ந்து பிற பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காஷ்மீரில் தொடர்ந்து தீவிரவாதிகள் பதுங்கி இருந்து […]

Read More

பாகிஸ்தானில் துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட்டது: சேட்டிலைட் புகைப்படம் அரசிடம் சமர்பிப்பு – விமானப்படை

March 6, 2019

பாகிஸ்தானில் துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பான சேட்டிலைட் புகைப்படம் அரசிடம் சமர்பிக்கப்பட்டது என விமானப்படை தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய விமானப்படையின் தாக்குதலில் பாலக்கோடு பயங்கரவாத முகாம் தகர்க்கப்பட்டதா? என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. சர்வதேச மீடியாக்களால் முகாம் உள்ள பகுதிக்கு செல்ல முடியவில்லை. ஆனால் சேதம் தொடர்பாக கேள்வி எழுப்பி வருகின்றன. ஜெய்ஷ் மதப்பள்ளியில் எந்தஒரு சேதமும் ஏற்படவில்லை என்றே சேட்டிலைட் புகைப்படம் காட்டுகிறது என ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. இந்நிலையில் […]

Read More

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – இந்தியா பதிலடி

March 6, 2019

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு, இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் நவ்செரா பகுதியில் நேற்று காலை இந்திய எல்லையில் உள்ள ராணுவ நிலைகள் மற்றும் கிராம பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கி சூடு மற்றும் பீரங்கி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இந்திய பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். உடனே பாகிஸ்தான் ராணுவம் பின்வாங்கியது. இந்த தாக்குதலில் யாருக்கும் உயிர்ச்சேதமோ, காயமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. கடந்த ஒரு […]

Read More

இந்திய நீர்மூழ்கி கப்பல் நடமாட்டம் என பாகிஸ்தான் புகார்

March 6, 2019

நீர்மூழ்கி கப்பல் தங்கள் கடல் எல்லைக்குள் ஊடுருவ முயன்றதாக பாகிஸ்தான் தெரிவித்த குற்றச்சாட்டை அடியோடு மறுத்திருக்கும் இந்தியா, பழைய வீடியோ பதிவை வைத்துக் கொண்டு, பாகிஸ்தான் புகார் தெரிவிப்பதாக விளக்கம் அளித்துள்ளது. காஷ்மீரின் புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், நீர்மூழ்கி கப்பல் நடமாட்டம் அடங்கிய வீடியோ பதிவை பாகிஸ்தான் கடற்படை வெளியிட்டுள்ளது. இந்திய நீர்மூழ்கி கப்பல், தங்கள் எல்லைக்குள் ஊடுருவ முயன்றதாக குற்றம்சாட்டியது. இதற்கு பதில் அளித்துள்ள இந்திய […]

Read More

பாகிஸ்தான் இந்திய சுகோய் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கூறுவது பொய்

March 6, 2019

பாகிஸ்தான் வான் பரப்பில் தாக்குதல் தொடுத்த இந்திய போர் விமானங்களில் சுகோய் 30 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியுள்ளதை இந்திய விமானப் படை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்திய விமானப் படையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் சுகோய் 30 விமானத்தை சுடவில்லை என மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 27ம் தேதி பாகிஸ்தானின் பால்கோட்டில் தாக்குதல் நடத்தச் சென்ற இந்திய போர் விமானங்கள் அனைத்தும் பத்திரமாக திரும்பி வந்துவிட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை […]

Read More