Day: March 4, 2019

பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்தியா

March 4, 2019

பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை இந்தியாவின் சுகோய் 30MKI விமானம் சுட்டு வீழ்த்தியது. புல்வாமா தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் போர் விமானங்களும் இந்திய வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைய முயன்றன. இந்திய போர் விமானங்கள் உடனடியாக தீவிரமாக செயல்பட்டு பாகிஸ்தான் போர் விமானங்களை விரட்டி அடித்தன. இருநாட்டு வான்பகுதியில் ஏற்பட்ட இந்த மோதலின்போது, இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானிடம் […]

Read More

அமெரிக்காவின் எப்-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய முதல் இந்திய விமானி அபிநந்தன்

March 4, 2019

அமெரிக்காவின் தயாரிப்பான எப்-16 ரக போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய முதல் இந்திய விமானி, மற்றும் உலகிலேயே முதல் வீரர் எனும் பெருமையை அபிநந்தன் வர்த்தமான் பெற்றுள்ளார். புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப் படை பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் தீவிரவாத முகாம்களை குண்டுவீசி அழித்துவிட்டு கடந்த மாதம் 26-ம் தேதி திரும்பியது. இதையடுத்து, இந்திய வான்வெளிக்குள் பாகிஸ்தான் போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்தன. அமெரிக்கா அளித்த எப்-16 ரக போர் விமானங்களை பயன்படுத்தி […]

Read More

பாலகோட் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிட முடியாது: விமானப் படை தளபதி பேட்டி

March 4, 2019

பாலகோட் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விமானப் படையால் கணக்கிட முடியாது என்று அதன் தலைமைத் தளபதி பி.எஸ்.தனோவா தெரிவித்துள்ளார். கோவையை அடுத்த சூலூர் விமானப்படை விமான நிலையத்தில் குடியரசு தலைவரின் கலர்ஸ் பிரசன்டேஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், விமானப் படை தளபதி பி.எஸ்.தனோவா, விமானத்துறை அதிகாரிகள், ராணுவ வீரர்கள் கலந்துகொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பி.எஸ்.தனோவா, ”பாலகோட் பயங்கரவாத முகாம்களில் எவ்வளவு பேர் இருந்தனர், அதில் எத்தனை பேர் இறந்தனர் என்று […]

Read More

மசூத் அசாரை பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு தெரிவித்திருந்த எதிர்ப்பை திரும்பப் பெற பாகிஸ்தான் முடிவு?

March 4, 2019

மசூத் அசாரை பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு தெரிவித்திருந்த எதிர்ப்பை திரும்பப் பெற பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒசாமா பின்லேடனின் நெருங்கிய நண்பராக மசூத் அசார் இருந்தார். 1999-ம் ஆண்டு காந்தகாரில் இந்திய விமானத்தை பயங்கரவாதிகள் கடத்தி பயணிகளை பிணைக்கைதிகளாக வைத்து மிரட்டியதால் இந்திய சிறையில் இருந்து மசூத் அசார் விடுவிக்கப்பட்டார். பின்னர் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை அவர் உருவாக்கினார். இந்தியாவில் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல், உரி மற்றும் பதான்கோட் ராணுவ முகாம் […]

Read More