Day: March 2, 2019

பாகிஸ்தானால் மனரீதியாக துன்புறுத்தப்பட்டார் அபிநந்தன்?

March 2, 2019

பாகிஸ்தான் வசம் இருந்தபோது மனரீதியாக துன்புறுத்தப்பட்டேன் என அபிநந்தன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் இருந்து நேற்று தாயகம் திரும்பிய அபிநந்தனுக்கு ராணுவ மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதனிடையே ராணுவ தளபதி பி.எஸ் தனோவாவிடம் பாகிஸ்தானில் என்ன நடந்தது என்பது குறித்து அபிநந்தன் விளக்கம் அளித்தார். இதைத்தொடர்ந்து, டெல்லியில் விமானப்படை வீரர் அபிநந்தனை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார். அப்போது அபிந்தனிடம் உடல் நலம் குறித்து அவர் கேட்டறிந்தார். மேலும் பாகிஸ்தானில் […]

Read More

இந்தியா விமானப்படை தாக்குதல் நடத்திய விவகாரம் : ஒத்துக்கொண்டது ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம்

March 2, 2019

ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நிகழ்த்தியதை அந்த இயக்கம் முதன்முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் இளைய சகோதரர் மவுலானா அமர், பெஷாவர் நகரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய போது இதனை தெரிவித்துள்ளார். இந்திய விமான படைகள் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைமை அலுவலகத்தின் மீது குண்டுகளை வீச வில்லை என்றும் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் மையத்தின் மீது இந்தியா குண்டுகளை வீசி உள்ளதாகவும் […]

Read More

டெல்லியில் அபிநந்தனுடன் பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் சந்திப்பு

March 2, 2019

டெல்லியில் விமானப்படை வீரர் அபிநந்தனை, பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார். புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக கடந்த மாதம் 26-ம் தேதி பாகிஸ்தான் பகுதியில் உள்ள பாலகோட் பகுதியில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலின்போது அபிநந்தன் என்ற விமானி ஓட்டிய மிக் ரக விமானத்தை பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். இதில் விமானத்திலிருந்து பாதுகாப்பாக பாராசூட் மூலம் வெளியே பறந்த அபிநந்தனை பாகிஸ்தான் […]

Read More

F-16 ரக போர் விமானத்தை இந்திய எல்லையில் பாகிஸ்தான் தவறாக பயன்படுத்தி உள்ளது : அரசு

March 2, 2019

தீவிரவாதத்துக்கு எதிராக பிரயோகிக்க வழங்கப்பட்ட எஃப்-16 ரக போர் விமானத்தை இந்திய எல்லையில் பாகிஸ்தான் தவறாக பயன்படுத்தி உள்ளதாக  அரசு குற்றம்சாட்டியுள்ளது.  இதுதொடர்பான ஆதாரங்களை அமெரிக்காவிடம் வழங்கவும் இந்தியா முடிவு செய்துள்ளது. தீவிரவாதத்தை தடுக்கும் நோக்கில் அமெரிக்காவிடம் இருந்து எஃப்-16 ரக போர் விமானங்களை பாகிஸ்தான் அரசு பெற்றுள்ளது. இதனை தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தவிர, வேறு எந்த நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தக்கூடாது என பாகிஸ்தான்-அமெரிக்கா இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் ஒப்பந்தத்தை மீறி, கடந்த வியாழக்கிழமை இந்திய […]

Read More

மசூத் அசாருக்கு சிறுநீரக கோளாறு: பாகிஸ்தான் ராணுவ மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை

March 2, 2019

ஜெய்ஷ்-இ- முகமது தீவரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் சிறுநீரக கோளாறு காரணமாக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருவதாகவும், பாகிஸ்தான் ராணுவ மருத்துவமனையிலேயே சிகிச்சை நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது  தாக்குதல் நடத்தி அழித்தன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. […]

Read More

இந்தியாவின் முப்படைத் தளபதிகளுக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு

March 2, 2019

இந்தியாவின் முப்படைத் தளபதிகளுக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம், ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் நடத்திய தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றநிலை உருவானது. இந்த பின்னணியில், எல்லையிலும், உள்நாட்டிலும் பல்வேறு நிலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல, படைகளின் தளபதிகளுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் அபாயம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து விமானப் படை தளபதி பி.எஸ்.தனோவா, கடற்படை தளபதி சுனில் லன்பா ஆகியோருக்கு […]

Read More

9 மாத குழந்தை உள்பட 3 பேர் பாகிஸ்தான் இராணுவம் தாக்குதலில் மரணம்

March 2, 2019

9 மாத குழந்தை உள்பட 3 பேர் சுட்டுக்கொலை போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இராணுவம் செயல்பட்டு வருவதால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. கஜோரி, போஜ் மாவட்டங்களில் மக்கள் வசிக்கும் இடங்களில் புகுந்து பாகிஸ்தான் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாகிஸ்தான் இராணுவத்தினர் நவீனரக துப்பாக்கிகளை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பூஞ்ச் மாவட்டத்தில் 9 மாத குழந்தை […]

Read More

இந்திய விமானி என தவறாக கருதி சொந்த மக்களால் அடித்து கொல்லப்பட்ட பாகிஸ்தானிய விமானி

March 2, 2019

இந்தியர் என தவறாக கருதி சொந்த மக்களால் பாகிஸ்தானின் எப் 16 ரக ஜெட் விமானத்தின் விமானி அடித்து கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14ந்தேதி ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தீவிரவாத தாக்குதலில் 40 துணை ராணுவ படையினர் பலியாகினர். இதனை தொடர்ந்து கடந்த 26ந்தேதி பாகிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் முகாம்கள் மீது இந்திய விமான படை குண்டுகளை வீசி தாக்கி […]

Read More

பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து எல்லையில் அத்துமீறி தாக்குதல்

March 2, 2019

பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து எல்லையில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. நேற்று நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர். காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இந்திய விமானப்படை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதைத்தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. தொடர்ந்து நேற்று 8–வது நாளாக இந்த தாக்குதல் நடந்தது. பாரமுல்லா மாவட்டம் உரி பகுதியில் உள்ள கமல்கோட் […]

Read More

அபிநந்தனின் வீரத்தால் நாடே பெருமை கொள்கிறது – தலைவர்கள் வாழ்த்து

March 2, 2019

அபிநந்தனின் வீரத்தால் நாடே பெருமை கொள்கிறது என தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். #Abhinandan #Return கடந்த மாதம் 27-ம் தேதி இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானத்தை புறமுதுகிட்டு ஓடச் செய்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் எல்லையில் துரதிஷ்டவசமாக பாராசூட்டில் இறங்கினார். விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கிய சம்பவம் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது. இதனை அடுத்து இந்தியா மற்றும் மற்ற உலக நாடுகளின் அழுத்தத்தை தொடர்ந்து […]

Read More