Day: March 1, 2019

இந்தியாவின் மகன் அபிநந்தனுக்காக முதல் முறையாக வரலாற்று நிகழ்வை கைவிட்ட இந்தியா – பாகிஸ்தான்!!

March 1, 2019

இந்தியாவின் மகன் அபிநந்தனுக்காக முதல் முறையாக இந்தியா – பாகிஸ்தான் இன்று வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து விடுவிக்கப்படும் விமானப்படை வீரர் அபிநந்தன் ராவல்பிண்டி ராணுவ முகாமில் இருந்து லாகூருக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டார். பின்னர் லாகூரில் இருந்து சாலை மார்க்கமாக வாகா எல்லை வழியாக இந்தியா அழைத்து வரப்பட்டார். இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுடன் பாகிஸ்தான் இராணுவ வாகனங்கள் புடை சூழ வாகா எல்லை வந்தடைந்தது. வாகா எல்லை […]

Read More

காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான சண்டையில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு

March 1, 2019

காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான சண்டையில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் குபுவாராவில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியை சிஆர்பிஎப், ஜம்மு காஷ்மீர் போலீஸ் மேற்கொண்டது. பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீடு சிதறியது. சண்டையில் உயிரிழந்ததாக கருதப்பட்ட பயங்கரவாதி ஒருவன், கண்ணிமைக்கும் நேரத்தில் இடிபாடுகளுக்கு இடையே எழுந்து வீரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்திவிட்டான். உடனடியாக அவன் கொல்லப்பட்டான். அவன் நடத்திய துப்பாக்கி சூட்டில் சிஆர்பிஎப் இன்ஸ்பெக்டர், ராணுவ வீரர் […]

Read More

வாகா எல்லை வந்தடைந்தார் விமானப்படை வீரர் அபிநந்தன்

March 1, 2019

பாகிஸ்தான் வசம் இருந்த இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் வாகா எல்லை வந்தடைந்தார். இந்திய விமானியான அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார். பாகிஸ்தான் வசமுள்ள வீரர் அபிநந்தனை இந்தியாவிற்கு திரும்ப கொண்டுவர பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து இந்திய அரசும் பாகிஸ்தானிடம் வலியுறுத்தியது. நேற்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் இம்ரான் கான், நல்லெண்ண அடிப்படையில் எவ்வித நிபந்தனையுமின்றி அபிநந்தன் இன்று விடுவிக்கப்படுவார் என்று அறிவித்தார். இந்நிலையில், விமானப்படை வீரர் அபிநந்தனை அழைத்துவருவதற்கான உரிய […]

Read More

இந்திய விமானி அபிநந்தனை விடுதலை செய்வதை எதிர்த்து பாகிஸ்தான் நீதிமன்றத்தில் வழக்கு

March 1, 2019

இந்திய விமானி அபிநந்தனை விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சமாதானத்துக்கான விருப்பத்தில், நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் காவலில் உள்ள இந்திய விமானப்படை அதிகாரி நாளை (இன்று) விடுதலை செய்யப்படுவார் என்று இம்ரான்கான் நேற்று அறிவித்தார். இதனையடுத்து இந்திய விமானி அபிநந்தன் இன்று மாலை 4 மணிக்கு வாகா எல்லைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே அவரை விடுதலை செய்யக்கூடாது என பாகிஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை விமானி பாகிஸ்தான் […]

Read More

பஞ்சாப் மாநில எல்லைப் பகுதியில் பாகிஸ்தானிய உளவாளி கைது

March 1, 2019

பாகிஸ்தான் சிம் கார்டுடன் மொபைல் போன் வைத்திருந்த வாலிபர் ஒருவரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். பஞ்சாப் மாநிலம் பெரோசபூர் எல்லைப் பகுதியில் சோதனை சாவடியில் சந்தேகமளிக்கும் வகையில் ஒரு வாலிபர் நடமாடிக்கொண்டு இருந்தார். ஒரு போர்வையை போர்த்திக் கொண்டு தனது மொபைல் போனில் புகைப்படம் எடுத்து கொண்டு இருந்தார். எல்லைபாதுகாப்பு படையினர் அவரை கைது செய்தனர். உடனே அவர் தன்னிடம் இருந்த மொபைல் போனை தூக்கி எறிந்து உள்ளார். பாதுகாப்பு படை வீரர்கள் அந்த […]

Read More

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு; 2 தீவிரவாதிகள் பிடிபட்டனர் என தகவல்

March 1, 2019

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் பிடிபட்டனர் என தகவல் வெளிவந்து உள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் ஹந்த்வாரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர் என பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அங்கு நடந்த தேடுதல் வேட்டையில் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 2 முதல் 3 தீவிரவாதிகள் பிடிபட்டு உள்ளனர் என தகவல் வெளியானது. அவர்களை பற்றிய அடையாளங்கள் உள்ளிட்ட விவரங்கள் […]

Read More

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு; ஒருவர் காயம்

March 1, 2019

காஷ்மீரின் வடக்கே இந்திய முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் காயமடைந்து உள்ளார். காஷ்மீரின் வடக்கே பாராமுல்லா மாவட்டத்தில் உரி பகுதியில் இந்திய படையினரின் முகாம்கள் மற்றும் பொதுமக்கள் வசித்து வரும் பகுதிகளை நோக்கி போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி பாகிஸ்தான் படை இன்று துப்பாக்கி சூடு நடத்தியது. அவர்கள் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சிறு பீரங்கிகள் மற்றும் ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு இந்திய தரப்பும் பதிலடி கொடுத்தது. […]

Read More

அபிநந்தனுக்கு வீர வணக்கம் செலுத்த மணல் சிற்பம்

March 1, 2019

பாகிஸ்தானின் எப்.16 விமானத்தை விரட்டிச் சென்று சுட்டு வீழ்த்திய இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தனின் வீரத்தை பாராட்டி ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள கடற்கரையில் மணல் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. பத்ம விருது பெற்ற மணல்சிற்பி சுதர்சன் பட்நாயக் கைவண்ணத்தில் இந்த மணல் சிற்பம் உருவாகியுள்ளது. தமது மாணவர்களுடன் இணைந்து மூன்று மணி நேரத்தில் இந்த சிற்பத்தை அவர் உருவாக்கியுள்ளார். அபிநந்தனுக்கு வீர வணக்கம் செலுத்துவதாக சுதர்சன் பட்நாயக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Read More