இலகுரக போர் விமானமான தேஜாஸ்-ஐ, இந்திய விமானப் படையில் இணைப்பதற்கான ஒப்புதல் கிடைத்தது. ஏரோ இந்தியா என்ற போர் விமானங்கள் காட்சி பெங்களூருவில் நேற்று தொடங்கியது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த கண்காட்சியில் 22 நாடுகளின் 61 போர் விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன
இரண்டாவது நாளான இன்று இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானத்தை விமானப் படையில் இணைப்பதற்கான ஒப்புதல் சான்று வழங்கப்பட்டது. இந்தச் சான்றிதழை ராணுவ விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பானது விமானப் படை தலைமைத் தளபதி BS தனோவாவிடம் வழங்கியது. இதனிடையே தேஜாஸ் போர் விமானத்தில் ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணம் செய்தார்.
பாலிமர்