புதிய F21 விமானங்களை இந்தியாவிற்கு அளிக்க லாக்ஹீடு மார்டின் விருப்பம்

புதிய F21 விமானங்களை இந்தியாவிற்கு அளிக்க லாக்ஹீடு மார்டின் விருப்பம்

அமெரிக்காவின் போர் விமான தயாரிப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டீன்,((Lockheed Martin)) இந்தியாவுக்கான, பன்முகத் தன்மை கொண்ட F-21 அதிவேக போர் விமானத்தை தயாரித்து, அதுகுறித்த தகவல்களை வெளியிட்டிருக்கிறது.

இந்தியாவுக்கு வழங்கவிருக்கும் அதிவேக போர் விமானங்களை, இந்தியாவிலேயே தயாரித்து வழங்கவும், அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டீன் நிறுவனம் அறிவித்திருக்கிறது. பன்முகத் தன்மை கொண்ட F-21 அதிவேக போர் விமானங்களை, டாடா குழுமத்தின், TaTa Advance Systems நிறுவனத்துடன், இணைந்து தயாரிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், லாக்ஹீட் மார்ட்டீன் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

அதிவேகத்தில் பறந்தாலும், எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக கண்டறிந்து, குறிவைத்து தாக்கும் வகையில், அதிநவீன தொழில்நுட்ப முறையில் இயங்கும் வண்ணம் F-21 வடிவமைக்கப்படுகிறது. இந்த போர் விமானங்களை, இந்தியாவிலேயே தயாரிப்பதால், உள்நாட்டில், வேலைவாய்ப்பு பெருக வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாகவும், அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டீன் நிறுவனம் கூறியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.