புல்வாமா தாக்குதல் : பாக். தூதரை அழைத்து எதிர்ப்பை பதிவு செய்தது இந்தியா

புல்வாமா தாக்குதல் : பாக். தூதரை அழைத்து எதிர்ப்பை பதிவு செய்தது இந்தியா

ஜம்மு, காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபூராவில், நேற்று ஜெய்ஸே இ முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

ஜம்மு, காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபூராவில், நேற்று ஜெய்ஸே இ முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சோகைல் மக்மூத்தை அழைத்து, வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோக்லே எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார். அந்த அமைப்பு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டையும் அவரிடம் விளக்கிக் கூறியதாக கூறப்படுகிறது. இதனிடையே பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் அஜய் பிசாரியாவை டெல்லிக்கு வருமாறு வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அவரிடம் கலந்தாலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.