விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்தப் போவதாக மிரட்டல், அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிப்பு

பாகிஸ்தானுக்கு விமானத்தை கடத்தப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மும்பையிலுள்ள ஏர் இந்தியா விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர், இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்தப் போவதாக மிரட்டல் விடுத்தான்.
இதையடுத்து அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகள், உடைமைகள் முழுமையான பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்க வேண்டும் என விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
வாகன நிறுத்தும் இடங்கள், சரக்குகளை கையாளும் இடங்களையும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.