அசாமிற்குள் நுழைய முயற்சி செய்தபோது, ரோஹிங்யா முஸ்லிம்கள் ஏழு பேர் கைது
அசாமிற்குள் நுழைய முயற்சி செய்த ரோஹிங்யா முஸ்லிம்கள் ஏழு பேரை, ரயில்வே பாதுகாப்புத் துறை கைது செய்துள்ளது.
திரிபுராவின் அகர்தலாவிலிருந்து அசாமிற்குச் செல்வதற்காக ரோஹிங்யா முஸ்லிம்கள் ஏழு பேர், வடக்கு திரிபுராவில் உள்ள தர்மாநகர் ரயில்வே நிலையத்திற்கு வந்துள்ளனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படையினர், அவர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஆறு பேர் பெண்கள் எனவும் ஒருவர் ஆண் எனவும் அனைவருமே 18 வயதிற்கு குறைவானவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டுவருகிறது.
நன்றி: பாலிமர்