இந்தியாவின் தாக்குதலை உறுதி செய்த பாகிஸ்தான் இராணுவம்

இந்திய ராணுவ விமானங்கள் பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவியது உண்மைதான் என்றும் இதனால் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் பாகிஸ்தான் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையொட்டிய பயங்கரவாதிகள் முகாம் மீது 1000 கிலோ அளவிலான குண்டுகளை இந்திய ராணுவம் வீசியுள்ளது. இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளின் முகாம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக விமானப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் தாக்குதல் குறித்து பாகிஸ்தானும் தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள  பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் மாஜ் ஜென் ஆஸிப், முஷாபார்பாத் பகுதியில் இந்திய விமானங்கள் அத்துமீறின.

சரியான நேரத்தில் பாகிஸ்தானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதனையடுத்து பாலகோட் பகுதியில் இந்திய ராணுவத்தின் வெடிகுண்டுகள்  விழுந்தன. அது திறந்தவெளி என்பதால் இந்த தாக்குதலில் எந்த உயிர்ச் சேதமும் பொருட் சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.