பாதுகாப்பு படையினரின் பயணத்துக்கு விமான சேவை – மத்திய அரசு ஒப்புதல்

காஷ்மீரில் பணியில் அமர்த்தப்படும் படைவீரர்களை தனி விமானங்கள் மூலம் கொண்டுசெல்லும் திட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதற்காகவே, டெல்லி – ஜம்மு, டெல்லி – ஸ்ரீநகர், ஜம்மு – ஸ்ரீநகர் வழித்தடங்களில் இரு மார்க்கத்திலும் விமானம் இயக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு படையின் காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் அரசு செலவில் விமானத்தில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் பணியின் போதும், விடுமுறையின் போது வீடு செல்லவும், விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும் போதும், விமான பயணத்தை மேற்கொள்ளலாம்.
7 லட்சத்து 80 ஆயிரம் வீரர்கள் இந்த சலுகையால் பயன் அடைவார்கள் என்றும் , அவர்களுக்கான விமான செலவுகளை மத்திய அரசு ஏற்கும் என்றும் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.