பனியில் சிக்கிய கர்பிணிக்கு இரட்டை குழந்தைகள். மீட்டடெடுத்த இராணவத்திற்கு குவியும் பாராட்டுகள்.
காஷ்மீரில் பந்திபோரோ என்ற இடத்தில் பனியில் சிக்கிய கர்ப்பிணி பெண் கடந்த 8ம் தேதி பிரசவத்திற்காக மருத்துவமனை செல்ல இயலாமல் கடுமையான பனிபொழிவு சிக்கிக்கொண்டார். அப்பகுதியில் பணியில் இருந்த இராணுவ வீரர்களுக்கு இத்தகவல் கிடைத்ததும், அப்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு பாதுகாப்பாக கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அப்பெண் இரு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
சரியான நேரத்தில் பெண்ணை மீட்டு வடக்கு காஷ்மீரின் பந்திபோரோ மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
கடந்த வெள்ளி அன்று, பந்திபோராவில் உள்ள பனார் இராணுவ கேம்ப் கமாண்டருக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.குல்சானா பேகம் என்ற பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல இராணுவத்தின் உதவியை அந்த கிராம மக்கள் வேண்டியுள்ளனர்.கிராம மக்களுக்கும் இராணுவ தான் உதவி என்றால் வரும் கல்லெறிபவர்கள் அல்ல என்பது தெரந்தே உள்ளது.
காலநிலை மிக மோசமாக இருந்துள்ளது.உறைபனி வெப்பநிலை -7 டிகிரிக்கும் கீழே செல்ல மீட்பது சவாலான காரியமாக தான் இருந்துள்ளது.
சாலை முழுதும் நிரம்பியிருந்த பனி மற்றும் சாலையில் வாகனங்களை பார்ப்பதே சிரமமாக இருந்துள்ளது.
களத்தில் குதித்தனர் வீரமிக்க பந்திபோரா ராஷ்டீரிய ரைபிள்ஸ் வீரர்கள்.கன நேரத்தில் உதவி தேவைப்படும் பெண்ணின் வீட்டிற்கு சென்ற வீரர்கள் பெண்ணை ஸ்டெச்சரில் சுமந்து 2.5கிமீ தூரம் பனியில் நடந்தே சென்றுள்ளனர்.
அதன் பின் இராணுவ ஆம்புலன்சில் பந்திபோரா மாவட்ட மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
நேர காலத்தை சரியான கணித்து ஒவ்வொரு நிமிடத்தையும் சரியாக செலவிட்டு பெண்ணை மருத்துமனைக்கு கொண்டு செல்லும் போதே அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக வேகமாக செய்துள்ளனர் இராணுவ வீரர்கள்.
மருத்துவமனைக்கு செல்லும் போதே தயாராக இருந்த மருத்துவர்கள் பெண்ணை உடனடியாக பரிசோதித்து மருத்துவ உதவிகள் வழங்கினர்.
பெண்ணுக்கு சிசேரியன் செய்தாக வேண்டும் என்று மருத்துவர்கள் கூற ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர் இரட்டை பெண் செல்வங்களை பெற்றெடுத்தார்.
வீரர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.