மும்பையில் பஸ்சில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு; மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு

மும்பையில் பஸ்சில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கபட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

தானே மாவட்டம் காஷிமிராவில் உள்ள வணிக வளாகம் அருகே நேற்று காலை திடீரென பயங்கர வெடிச் சத்தம் கேட்டது. இதைக்கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பதறி அடித்துக் கொண்டு வந்து பார்த்தனர். அப்போது, அங்குள்ள மும்பை – ஆமதாபாத் சாலையில் குறைந்த சக்தி கொண்ட வெடிகுண்டு வெடித்து இருந்தது தெரியவந்தது. இதனால் பதறி போன அவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து வந்து சோதனை செய்தனர். இதில் அங்கு நாட்டு வெடிகுண்டு வெடித்து இருந்தது தெரியவந்தது. போலீசார் அங்கு கிடந்த தடயங்களை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராய்காட் மாவட்டத்தில் ஒரு மாநில போக்குவரத்து பஸ்சில் வியாழக்கிழமை சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வெடிகுண்டு வெடித்து இருந்தால் மிகுந்த சேதம் ஏற்பட்டு இருக்கும். மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்பு குழு (ஏ.டி.எஸ்) இரண்டு சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை தொடங்கி உள்ளன. வெடிகுண்டு நிபுணர்கள் குழு (பி.டி.டி.எஸ்) வெடிகுண்டு மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்பி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.