தீவிரவாதிகளின் சதி திட்டத்தை முறியடித்த ராணுவம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரியில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நிகழ்த்தவிருந்த தாக்குதலை பாதுகாப்புப் படை வீரர்கள் முறியடித்துள்ளனர்.

உரி அருகே ராஜர்வானி ((Rajarwani)) என்ற இடத்தில்
பீரங்கிப் பிரிவு முகாம் உள்ளது. இங்கு இன்று அதிகாலை 3 மணி அளவில் தீவிரவாதிகள் சிலரின் நடமாட்டம் இருந்ததை வீரர்கள் கவனித்தனர். அவர்களை நோக்கி பாதுகாப்புப் படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் சடலங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

முகாமில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருப்பதோடு, துணை ராணுவம் மற்றும் காவல்துறை உதவியோடு பாதுகாப்புப் படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் சுற்றித் திரிந்த இருவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.