இந்திய தூதரை நேரில் அழைத்து பாகிஸ்தான் கண்டனம்
இந்திய தூதரை நேரில் அழைத்து பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இந்திய விமானப்படை தாக்கியதை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கான இந்திய தூதரை (பொறுப்பு) பாகிஸ்தான் தற்காலிய வெளியுறவு செயலாளர் நேரில் வரவழைத்து கண்டனம் தெரிவித்தார்.
அப்போது, பாகிஸ்தானின் பிராந்திய இறையாண்மையை மீறி, பாகிஸ்தானுக்குள் இந்திய விமானங்கள் ஊடுருவியது கண்டனத்துக்குரியது என்று அவர் கூறினார். இந்த மிரட்டலுக்கு பதிலடி கொடுப்பதற்கான இடத்தையும், நேரத்தையும் தாங்களே முடிவு செய்வோம் என்றும் அவர் கூறினார்.
இந்திய மக்களை ஏமாற்றுவதற்காக, பயங்கரவாத முகாம்களை அழித்ததாக ஆதாரமற்ற செய்தியை இந்தியா பரப்புவதாகவும் அவர் கூறினார்.