புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா – பாக்., இடையே மிகவும் ஆபத்தான சூழல் நிலவுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், இந்தியா – பாக்., இடையே தற்போது நிலவும் சூழல் குறித்து பேசினார். அப்போது அவர், தற்போது இந்தியா – பாக்., இடையே மிக மிக மோசமான சூழல் உள்ளது. மிக ஆபத்தான சூழலும் கூட. இந்த போர் சூழலை தடுத்து நிறுத்த விரும்புகிறோம். அதிக அளவிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனை நிறுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.
இந்தியா மிக வலிமையான நாடாக காணப்படுகிறது. இந்த தாக்குதலில் இந்தியா ஏறக்குறைய 50 உயிர்களை இழந்துள்ளது. என்னால் அவர்களின் நிலையை புரிந்து கொள்ள முடிகிறது. இரு நாடுகளுடனும் அமெரிக்க நிர்வாகம் பேசி வருகிறது. இந்தியா – பாக்., இடையே பல பிரச்னைகள் உள்ளது. பாக்.,க்கு அளித்து வந்த 1.3 பில்லியன் டாலர் நிதியுதவியை நிறுத்தி உள்ளேன்.பாக்., உடன் பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில காலங்களாக பாக்., உடன் நல்லுறவை வளர்த்து கொள்ள விரும்பினோம் என்றார்.