இந்தியாவிற்கு வந்தன சின்னூக் வானூர்திகள்
நான்கு சின்னூக் வானூர்திகள் இந்தியா வந்துள்ளன. 4 CH-47F Chinook Heavy-lift வானூர்திகள் இன்று காலை குஜராத்தின் முந்திரா துறைமுகத்திற்கு வந்திறங்கின. merchant கப்பலில் வந்திறங்கிய இந்த வானூர்திகள் குறிப்பிட்ட நேரகாலத்திற்கு முன்னதாகவே வந்து சேர்ந்துள்ளன.
மார்ச் மாதம் தான் முதல் வானூர்தி இந்தியா வருவதாய் இருந்த வேளையில் தற்போது முன்னதாகவே இந்தியா வந்துள்ளது.
மேலும் 11 Chinooks இனி இந்தியா வரும். September 2015 அன்று 15 Chinooks வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது
இந்த வானூர்திகள் இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட்டு சண்டிகர் விமானப் படைத் தளத்திற்கு அனுப்பப்படும்.அங்கு அது 126 Helicopter Flight யூனிட்டில் இணைக்கப்படும்.இணைப்பு விழா அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
வடகிழக்கில் சின்னூக் வானூர்திக்காகவே ஒரு ஸ்குவாட்ரான் தோற்றுவிக்கப்பட உள்ளது.