Breaking News

நாங்கள் பதிலடி கொடுக்க முழு உரிமையும் உள்ளது: பாக். அமைச்சர்

பாதுகாப்பிற்காக நாங்கள் பதிலடி கொடுக்க எங்களுக்கு முழு உரிமையும் உள்ளது என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெமூத் குரேஷி தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவத்தின் 12 மிராஜ் ஜெட் போர் விமானங்கள் எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தானின் முக்கிய தீவிரவாத முகாம்கள் மீது  இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணியளவில்  சுமார் 1000 கிலோ வெடிகுண்டை வீசி தீவிரவாதிகள் முகாம்களை முற்றிலுமாக அழித்தன. இதில் பாகிஸ்தானில் இயங்கிய முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு அரசுகளும் அவசர ஆலோசனையில் ஈடுபட்டன.

இதில் பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெமூத் குரேஷி கூறுகையில், ”பாகிஸ்தானில் எல்லை மீறி இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியா இன்று ஆக்கிரமிப்பு செய்துள்ளது. எனவே பாகிஸ்தான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள  பதிலடி கொடுக்க முழு உரிமையும் இருக்கிறது” என்றார்.

பாகிஸ்தானில் இந்தியா நடத்திய தாக்குதல் குறித்து  அந்நாட்டு பிரதமர் இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published.