இந்திய ராணுவ வீரரின் ஒரு அடிக்கு பயந்து நடுங்கியவன்தான் மசூத் அசார்…!
இந்திய ராணுவ வீரர் கொடுத்த ஒரு அடியில் பயங்கரவாத இயக்கத்தின் அனைத்து திட்டங்களையும் உளறியவன் என மசூத் அசாரை விசாரித்த விசாரணை அதிகாரி கூறியுள்ளார்.
காஷ்மீரில் செயல்பட்டு வந்த பயங்கரவாத அமைப்பில் கோஷ்டி மோதலை தீர்த்து வைக்க காஷ்மீர் வந்த பயங்கரவாதி மசூத் அசாரை 1994-ல் இந்திய பாதுகாப்பு படை கைது செய்தது. இதனையடுத்து 1999-ம் ஆண்டு நேபாளத்தில் இருந்து புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டபோது இந்திய அரசால் அவன் விடுவிக்கப்பட்டான். 180 பயணிகளை காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயத்தில் பயங்கரவாதிகள் மூவரை விடுதலை செய்ய அப்போதைய வாஜ்பாய் அரசு சம்மதம் தெரிவித்தது.

செய்திகள்மாவட்ட செய்திகள்விளையாட்டுபுதுச்சேரிமும்பைபெங்களூருசினிமாஜோதிடம்ஆன்மிகம்தலையங்கம்உங்கள் முகவரிமணப்பந்தல்DT AppsE-PaperDTNextThanthi AscendThanthi TV
தேசிய செய்திகள்
இந்திய ராணுவ வீரரின் ஒரு அடிக்கு பயந்து நடுங்கியவன்தான் மசூத் அசார்…!

இந்திய ராணுவ வீரர் கொடுத்த ஒரு அடியில் பயங்கரவாத இயக்கத்தின் அனைத்து திட்டங்களையும் உளறியவன் என மசூத் அசாரை விசாரித்த விசாரணை அதிகாரி கூறியுள்ளார்.
பதிவு: பிப்ரவரி 18, 2019 17:51 PM
காஷ்மீரில் செயல்பட்டு வந்த பயங்கரவாத அமைப்பில் கோஷ்டி மோதலை தீர்த்து வைக்க காஷ்மீர் வந்த பயங்கரவாதி மசூத் அசாரை 1994-ல் இந்திய பாதுகாப்பு படை கைது செய்தது. இதனையடுத்து 1999-ம் ஆண்டு நேபாளத்தில் இருந்து புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டபோது இந்திய அரசால் அவன் விடுவிக்கப்பட்டான். 180 பயணிகளை காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயத்தில் பயங்கரவாதிகள் மூவரை விடுதலை செய்ய அப்போதைய வாஜ்பாய் அரசு சம்மதம் தெரிவித்தது.
Sponsored by Revcontent
This Little Drone Is Flying Off Shelves! The Price Will Shock You
Weekly Penny
இதனையடுத்து ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தை தொடங்கிய மசூத் அசார், இந்தியாவிற்கு பெரும் சவாலாக எழுந்துள்ளான். இந்நிலையில் மசூத் அசாரை அப்போது விசாரித்த விசாரணை அதிகாரி பேசுகையில், மசூத் அசாத் இந்திய ராணுவ வீரர் கொடுத்த ஒரு அடியில் பயங்கரவாத இயக்கத்தின் அனைத்து திட்டங்களையும் உளறியவன், அவனை கையாள எந்தஒரு கடினமும் தெரியவில்லை என கூறினார்.
இந்திய பாதுகாப்பு படையின் முன்னாள் டைரக்டர் ஜெனரல் அவினேஷ் மோகானானி, மசூத் அசாரை விசாரித்தது தொடர்பாக பேசுகையில், “அவனை விசாரிப்பது மிகவும் எளிதான காரியமாகவே இருந்தது, கன்னத்தில் இந்திய ராணுவ வீரர் கொடுத்த ஒரு அடியிலேயே பயங்கரவாத இயக்கம் எப்படி செயல்படுகிறது, அதனுடைய அடுத்த நடவடிக்கை என்ன என்பதை வரிசையாக தெரிவித்தான்” என்று கூறினார். பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ. பயங்கரவாதத்தை பயன்படுத்தி இந்தியாவில் எப்படி மறைமுகமான தாக்குதலை நடத்துகிறது என்பதையும் எளிதாகவே தெரிவித்து விட்டான். அவனிடம் இருந்து உண்மையை பெற நாங்கள் கடினமான நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டார்.