முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர மனோகர் பாரிக்கர் உடல்நிலை கவலைக்கிடம்

முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர மனோகர் பாரிக்கர் உடல்நிலை கவலைக்கிடம்

தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

கோவா சட்டப்பேரவைத் துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ இது குறித்துக் கூறுகையில், ஜனவரி 31ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனோகர் பாரிக்கரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், கடவுளின் அருளால் மட்டுமே அவர் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கோவாவில் மனோகர் பாரிக்கர் முதல்வராக இருக்கும் வரை எந்தப் பிரச்னையும் இல்லை, ஒருவேளை அவர் பதவியில் இருந்து விலகினாலோ  அல்லது அவருக்கு ஏதேனும் நிகழ்ந்தாலோ கோவாவில் மிகப்பெரிய அரசியல் சிக்கல் ஏற்படும் என்றும் லோபோ கூறினார்.

கடந்த ஆண்டு முதல் கணைய பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று வந்த மனோகர் பாரிக்கர் (63) கடந்த ஜனவரி 31ம் தேதி புது தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு ஏற்பட்டிருக்கும் உடல்நலப் பிரச்னையை சரி செய்ய சிகிச்சை எதுவும் கிடையாது. அவர் மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறார். தற்போது அவர் கடவுள் அருளால்தான் பணியாற்றி வருகிறார் என்றும் லோபோ கூறினார்.

முன்னதாக நேற்று “மனிதனின் மனதால் எந்த ஒரு நோயையும் வெல்ல முடியும்” என நோய்வாய்ப்பட்டுள்ள கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் கூறியிருந்தார்.

உலக புற்றுநோய் தினத்தையொட்டி திங்கள்கிழமை அவர் வெளியிட்ட சுட்டுரைப்பதிவில் இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

முதல்வர் பாரிக்கர் (63) கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு தற்போது தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரியில் இருந்து கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு தில்லி, நியூயார்க், மும்பை மற்றும் கோவாவில் சிகிச்சைப் பெற்று வந்த பாரிக்கர் கடந்த சனிக்கிழமை மீண்டும் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.  அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவ உடல் பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. 

முன்னதாக, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட பல பிரமுகர்களும் பாரிக்கரின் உடல்நலம் குறித்து விசாரித்து சென்றுள்ளனர்.

நன்றி: தினமணி

Leave a Reply

Your email address will not be published.