ஜம்மு காஷ்மீரில் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாமில் குவிந்த இளைஞர்கள்
ஜம்மு காஷ்மீரில் ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முகாமில் இளைஞர்கள் அதிகமான அளவு கலந்து கொண்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் இளைஞர்களை பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்கள் தவறான பாதைக்கு வழிநடத்தி வருகிறது. இந்திய இளைஞர்களை வைத்தே பாதுகாப்பு படைகளுக்கு எதிராக நடவடிக்கையை எடுத்து வருகிறது. புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதல் இந்தியாவையே உலுக்கியது. இந்நிலையில் பாரமுல்லாவில் ராணுவத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற்றது. 111 இடத்திற்கு ஆள்சேர்ப்பு பணி நடைபெற்றது. இதில் அதிகமான காஷ்மீர் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
ஆள்சேர்ப்பு முகாமிற்கு வந்த இளைஞர் பிலால் அகமது பேசுகையில், “எங்களுடைய குடும்பங்கள் மற்றும் தேசத்திற்காக பணியாற்ற எங்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும், அதைவிட வேறு என்ன வேண்டும்?” என கேள்வியை எழுப்பியுள்ளார்.