இந்தியாவுடன் அமைதிப்போக்கை கடைபிடிக்க விரும்புவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாதில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, காஷ்மீரில் 40 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்ற நிலை அதிகரித்துள்ளதாக கூறினார். பதற்றத்தை தணிக்க ஐ.நா.சபை மற்றும் உலக நாடுகளின் உதவியை பாகிஸ்தான் கோரியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.