தேஜஸ் போர் விமானத்தில் பறந்த பி.வி.சிந்து!

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, தேஜஸ் போர் விமானத்தில் இன்று பறந்தார்.

மத்திய பொதுத்துறை நிறுவனமான எச்.ஏ.எல் நிறுவனம் சார்பில் நடத்தப்படும் ‘ஏரோ இந்தியா – 2019’ சர்வதேச விமான கண்காட்சி பெங்களூ ரில் நடந்து வருகிறது. அங்குள்ள எலஹங்கா விமான படை தளத்தில் நடக்கும் இந்தக் கண்காட்சி, இரண்டு வருடத்துக்கு ஒரு முறை நடப்பது வழக்கம். இக்கண்காட்சியில், 22 நாடுகளின் 61 அதிவேக போர் விமானங்களும், 365 நிறுவனங்களின் கண்காட்சி மையங்களும் இடம் பெற்றுள்ளன.

இங்கு, ருத்ரா, சாரங்,நேத்ரா, சுகோய், ஹெச்டிடி -40, உட்பட பல விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தேசிய அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்திய ரஃபேல் விமானமும் வானில் சாகசம் நிகழ்த்தியது.

இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் விமானமான தேஜஸ் விமானம், இந்தக் கண்காட்சியில் பறந்தது. இதில் ராணுவ தளபதி பிபின் ராவத் நேற்று முன் தினம் பறந்தார். இந்நிலையில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, தேஜஸ் விமானத்தில் இன்று பறந்தார். 

Leave a Reply

Your email address will not be published.