மும்பை தீவிரவாத தாக்குதலில் பாக். ராணுவத்துக்கு தொடர்பு
மும்பை தீவிரவாத தாக்குதலில் தொடர்பு இருப்பதாகக் கூறி பாகிஸ்தானைச் சேர்ந்த இரு ராணுவ அதிகாரிகளுக்கு மும்பை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவோடு மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதை, வழக்கில் அப்ரூவராக மாறியுள்ள தீவிரவாதி டேவிட் ஹெட்லி ((David Coleman Headley)) உறுதிப்படுத்தியிருப்பதாக போலீஸ் தரப்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் பாகிஸ்தான் ராணுவத்தில் பணிபுரிந்தவர்களான மேஜர் இக்பால், மேஜர் பாஷா ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
தாஜ் ஹோட்டலை உளவு பார்க்க டேவிட் ஹெட்லிக்கு இக்பால் 18 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதை அடுத்து இருவருக்கும் எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடியாணையை மும்பை அமர்வு நீதிமன்ற நீதிபதி பிறப்பித்தார்.
நன்றி: பாலிமர்