இந்தியாவின் விமானங்கள் சூட்டு வீழ்த்தப்பட்டன; விமானி கைது: பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர்

பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இந்திய விமானங்கள் சூட்டு வீழ்த்தப்பட்டதாகவும், விமானி ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும்  அந்நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளர் ஆசிப் கபூர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நடத்திய இந்தத் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிஃப் கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
”எல்லை மீறி தாக்குதல் நடத்திய இந்தியாவுக்கு பாகிஸ்தான் விமானப் படை  இன்று (புதன்கிழமை) பதிலடி அளித்தது. பாகிஸ்தான் வான்வெளியில் பறந்த இரண்டு இந்திய ராணுவ விமானங்கள் பாகிஸ்தான் விமானப் படையால் சுடப்பட்டன. இதில் இரண்டும் கீழே விழுந்தன. இந்திய விமானி ஒருவர் கைது செய்யப்பட்டார்” என்றார்.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது  இன்று  அதிகாலை 3.30 மணியளவில்  தாக்குதல் நடத்தின. 12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டைத் தீவிரவாத முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்தன.
இதில் பாலாகோட், சாக்கோட்,  முஸாஃபராபாத் ஆகிய இடங்களில் தாக்குதல் நடந்துள்ளன. அங்கு இயங்கி வந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இதற்கு பாகிஸ்தான் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.