பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய விமானப் படையின் துணிவை பிரான்ஸ் அரசு பாராட்டியுள்ளது.
எல்லைத் தாண்டிய தீவிரவாதத்தில் இருந்து நாட்டை தற்காத்துக் கொள்ள இந்தியாவுக்கு முழு உரிமை இருப்பதாகவும் அந்நாடு அறிவித்துள்ளது. தீவிரவாத இயக்கங்கள் மீது பாகிஸ்தான் அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் பிரான்ஸ் அரசு வலியுறுத்தியுள்ளது.இதே போல் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
Polimer