Breaking News

சியாச்சினை காக்க தன்னுயிர் ஈந்த மதுரைவீரர் செபாய் கனேசன் செபாய் கனேசன்

சியாச்சினை காக்க தன்னுயிர் ஈந்த மதுரைவீரர்  செபாய் கனேசன்
செபாய் கனேசன்
 ஆர்வமிக்க அதீத ஆற்றல் கொண்ட இளம் வீரர்.செபாய் கனேசன் மதுரை மாவட்டம் சொக்கதேவன்பட்டியை சேர்ந்தவர்.தனது 12ம் வகுப்பு பள்ளி படிப்பை முடித்தவுடன் இராணுவத்தின் இணைந்தார்.அவரது ஊரான சொக்கதேவன்பட்டியில் பல வீரர்கள் இராணுவத்தில் இணைந்துள்ளனர்.
இவர்களின் வீரக்கதை கேட்டு தான் வளர்ந்தார்.25 ஆண்டுகளுக்கு முன் அதே கிராமத்தை சேர்ந்த கேப்டன் தேவராஜ் அவர்கள் காஷ்மீரில் வீரமரணம் அடைந்தார்.அவரது வீரக்கதை அங்குள்ள இளைஞர்களுக்கு உத்வேகம் மூட்டியுள்ளது.அவர் ஏப்ரல் 2010ல் 19வது பட்டாலியன் மெட்ராஸ் ரெஜிமென்டில் இணைந்து நமது இந்திய தேசத்திற்கு சேவை செய்ய தன்னை ஈடுபடுத்திகொண்டார்.
பணியின் போது தன் சகவீரர்களை அடிக்கடி ஊக்கப்படுத்தி அதற்கு முன்னுதாரணமாகவும் இருந்தவர்.அவரது ஆறு ஆண்டு கால பணியில் காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.
தேர்ந்த இராணுவ வீரர் எனினும் அவர் ஆகச்சிறந்த விளையாட்டு வீரரும் கூட.அவர் ஆகஸ்டு 15 ,2016ல் சியாச்சின் பட்டாலியனில் இணைந்த போது முன்னனியில் உள்ள மிக ஆபத்தான சோனம் நிலையை காக்க சென்ற வீரர்கள் குழுவிலேயே மிக  இளம்வீரராக இருந்தார்.எலும்பை ஊடுருவும் குளிரிலும் அங்கு பணியும் செய்ய தயங்கவில்லை.அவர் மகிழ்ச்சியான வீரராக இருந்தார்.எந்த பணியையும் விரும்பி ஏற்கும் தன்னார்வலராக இருந்தார்.
அவர் அவரது சக வீரர்களால் மதிக்கப்படும் ஒரு வீரராக இருந்தார்.செபாய் கனேசனின் தேச சேவை அவரது சகோதரரை  உந்த அவரும் இராணுவத்தில் இணைந்துள்ளார்.
2016 சியாச்சின் கிளாசியர் பனிச்சரிவு
பிப்ரவரி 2016ல் சியாச்சினின் வடக்கு பகுதியில் பனிச்சரிவில் கேம்ப் மூழ்கியதில் அதில் சிக்கிய பத்து வீரர்களுள் செபாய் கனேசனும் ஒருவர்.3வது பிப்ரவரியில் இந்த சம்பவம் நடைபெற்றது.சியாச்சினில் இந்த நிலை கிட்டத்தட்ட  19,600 அடி உயரத்தில் இருந்தது.இந்த நிலையை ஒரு Junior Commissioned Officer தலைமையில் ஒன்பது வீரர்கள் காவல் செய்தனர்.
கேம்ப் பனிச்சரிவில் மூழ்கிய போது தகவல் அறிந்து இராணுவம் மற்றும் விமானப்படை இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டது.
உலகின் மிக உயர்ந்த போர்க்களத்தில் தங்களை ஒருபோதும் அரவணைக்காத காலநிலையில் 21,000அடி உயரம் வரை உள்ள காவல் நிலைகளை நமது வீரர்கள் பாதுகாக்கின்றனர்.இங்கு பனிச்சரிவு என்பது சாதாரணம்.பனி திரட்டல் அல்லது காலை சுளீர் வெயில் காரணமாக இந்த பனிச்சரிவுகள் நடைபெறுகின்றன.இயற்கையை வெல்ல யார் முடியும்? செங்குத்தான பனிமலைகளில் சரிவுகள் சாதாரணம்.
இந்த பனிச்சரிவுகளை பற்றி முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்க  Avalanche Study Establishment (SASE) காஷ்மீரில் பல்வேறு கண்கானிப்பாளர்களுடன் இயங்கி வருகிறது.இவர்கள் சாதகமான பனிச்சரிவு குறித்து வீரர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கின்றனர்.இருந்தாலும் அனைத்து பனிச்சரிவுகளையும் சரியாக கண்காணிக்க முடிவதில்லை.
இராணுவம் மற்றும் விமானப்படை இந்த கடும் காலநிலையில் இணைந்து தேடுதல் நடத்தி அவர்களை மீட்ட பொழுது யாரும் உயிர்பிழைத்திருக்கவில்லை.
ஆறாவது நாள் தான் அவர்களை கண்டுபிடிக்க முடிந்தது.எத்தனை நாள்கள் உயிருடன் உணவு இல்லாமல் மூச்சு விடமுடியால் அந்த பனிக்குள் இருந்தனரோ !! ஆறாவது நாள் ஒரு வீரர் ஹனுமந்தப்பா அவர்கள் மட்டும் உயிருடன் மீட்டு அவரும் பின்னர் வீரமரணம் அடைந்தார்.
செபாய் கனேசன் மற்றும் அந்த ஒன்பது வீரர்களுக்கும் வீரவணக்கம்.

Leave a Reply

Your email address will not be published.