புல்வாமா தாக்குதல்: இந்தியா எவ்வாறெல்லாம் பதிலடி கொடுக்கலாம்?

இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரின் புல்வாமாவில், நடத்தப்பட்ட தாக்குதலில் மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ- முகமது என்ற தீவிரவாத அமைப்பு அந்த தாக்குதலில் ஈடுபடவில்லை என பாகிஸ்தான் மறுத்துள்ளது.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில் இந்திய அரசு இதற்கு பதிலடி கொடுக்கும் சூழலிலும், மேற்கொண்டு இம்மாதிரியான தாக்குதல்கள் நடைபெறாமல் இருக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது.
எனவே இந்தியா ராஜீய முறையிலும், பொருளாதாரம் மற்றும் ராணுவ ரீதியாகவும் என்ன மாதிரியான நடவடிக்கையை எடுக்க முடியும் என வெளியுறவுக் கொள்கை ஆய்வாளர் துருவ் ஜெய்ஷங்கர் விளக்குகிறார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான அரசியல் ரீதியான உறவு மூன்று வருடங்களாக சுமூகமான நிலையில் இல்லை.

ராஜரீகரீதியாக இருக்கும் வாய்ப்புகள் என்ன?

இந்திய பிரதமராக 2014ஆம் ஆண்டு நரேந்திர மோதி பதவிக்கு வந்தபின், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃபை தனது பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்தார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடனான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கினார். லாகூருக்கு திட்டமிடாத விஜயம் மேற்கொண்டார். மேலும், அதிகம் விமர்சனத்துள்ளான பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டு (இந்தியா மற்றும் பாகிஸ்தான் இணைந்து) விசாரணைக்கு ஒப்புதல் அளித்தார்
இவை அனைத்துக்கும் பதிலாக, பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தி இரு தரப்புக்குமான உறவை பிரித்தது. இந்தியாவில் உள்ள காஷ்மீர் பிரிவினைவாதிகளை சந்திக்க வேண்டும் என கோரியது, இந்திய உளவாளி என்று கூறப்பட்டவரை கைது செய்து மரண தண்டனை வழங்கியது.

மோதி மற்றும் ஷெரிஃப் லாகூரில் அமைதி பேச்சுவார்த்தையை தொடங்கிய அடுத்த நாளில், பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப் படைதளத்தில் நடைபெற்ற தாக்குதலில் ஆறு சிப்பாய்கள் கொல்லப்பட்டனர்.
அந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் உளவுத்துறையுடன் நெருக்கமான அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது மீது இந்திய அதிகாரிகள் குற்றஞ்சாட்டினர்.
ஜூலை 2016க்குள் இந்தியா தனது பொறுமையை இழந்துவிட்டது. பல விஷயங்களில் கடினம் காட்டத் தொடங்கியது.
பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் பதியேற்றபின்னும் ஐ.நா பொதுச் சபையில் இருநாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கும் இடையே நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ரத்தானது.
இருப்பினும் வழக்கமான ராஜரீக போக்குகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று கூறி இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்து வரும் ராஜரீக நடவடிக்கையை மீண்டும் தொடங்கியது.
இந்தியா தனது நட்பு நாடுகளுடன் சேர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுடன் இணைந்து, ஜெய்ஷ்-இ-முகமது, லக்ஷர்-இ-தொய்பா மற்றும் டி-நிறுவனம் (இந்தியாவில் இருந்து தப்பியோடிய தாவூத் இப்ராஹிமை தலைவராக கொண்டு செயல்படும் நிறுவனம்) ஆகிய நிறுவனங்களை இந்தியா குறிப்பிடும்.
இந்தியா தனது கூட்டணி நாடுகளின் முக்கிய பாதுகாப்பு சவால்களையும் பாகிஸ்தானுடன் இணைத்துள்ளது. எடுத்துக்காட்டாக ஜப்பானின் வட கொரியா குறித்த கவலைகளை கூறலாம்.
இம்மாதிரியான நடவடிக்கைகள் பிற நாடுகளும் இந்தியாவின் பாகிஸ்தான் குறித்த கவலைகளை கண்டுகொள்ள வைத்தது. பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள் குறித்த உளவுத்துறை நடவடிக்கை மற்றும் பல நாடுகளில் உள்ள அதன் நிதி ஆதாரங்களை கண்டுபிடிப்பது ஆகியவை குறித்து இந்தியாவுக்கு உதவி புரியும்.
ஆனால், என்னவாக இருந்தாலும், பிற நாடுகள் பாகிஸ்தானுடன் உறவை வைத்துக் கொள்வதுதான் இந்தியாவின் தற்போதைய சவால்.
அமெரிக்கா தற்போது பாகிஸ்தான் மீது அதிருப்தியிலேயே உள்ளது. ஆனால், சீனா பாகிஸ்தானின் கூட்டாளியாகவே உள்ளது.
பாகிஸ்தானுக்கு அணுஆயுதம் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தை வழங்கியுள்ளது சீனா. மேலும், சீனா- பாகிஸ்தான் கூட்டு பொருளாதார நடவடிக்கைகள்படி, பல மூலோபாய திட்டங்களில் முதலீடுகளும் செய்யப்பட்டுள்ளன.
செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுகள் ஆகிய இரண்டுமே இந்தியாவுடன் கடந்த ஐந்து வருடங்களாக இணக்கமான ஒரு உறவை கடைபிடித்தாலும், பாகிஸ்தானுடன் பொருளதார மற்றும் பாதுகாப்பு கூட்டணிகளை வைத்துள்ளனர்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் வர்த்தக சலுகைகளில் சில முன்னுரிமைகளை பாகிஸ்தானுக்கு வழங்குகின்றன. பாகிஸ்தானிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் சிலவற்றிற்கு இந்தியாவைக் காட்டிலும் குறைந்த வரிகளே விதிக்கப்படுகின்றன.
பாகிஸ்தானுடன் இணக்கமாக பிரிட்டன் செயல்படுவதாக சில ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஆனால் பிரெக்ஸிட்டுக்கு பிறகு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர்கள் கருதுகின்றனர்.

பொருளாதார ரீதியாக பாகிஸ்தான் மீது இந்தியா நடவடிக்கை எடுக்க முடியுமா?

பாகிஸ்தான் தனது வர்த்தக கூட்டணி நாடு என்ற அந்தஸ்த்தை நீக்கியது இந்தியா. மேலும், பாகிஸ்தானில் இருந்து வரும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரை வரி விதித்தது. பாகிஸ்தானை `தனிமைப்படுத்துவோம்` என்றும் தெரிவித்தது.

வர்த்தக கூட்டணி நாடு அந்தஸ்தை ரத்து செய்த பிறகு, இந்தியாவுக்கான பாகிஸ்தான் ஏற்றுமதி பொருட்கள் மீதான சுங்க வரி அதிகரிக்கும். அதன் விளைவாக இந்தியா தடைகளை விதிக்க நேரிடும்.
வர்த்தக கூட்டணி நாடு என்ற அந்தஸ்தை நீக்கினால், அதிகப்படியான சுங்க வரிகள் விதிக்கப்படலாம். மேலும், இந்தியா தடைகளையும் விதிக்கலாம். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே நேரடி வர்த்தகம் வெகு குறைவு என்ற போதிலும் இந்தியாவின் இந்த நடவடிக்கை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
வேறு சில வழிகளில் இந்தியா பாகிஸ்தானுக்கு சில தண்டனைகளை வழங்கி வருகிறது. எடுத்துக்காட்டாக கடந்த 2007ஆம் ஆண்டிலிருந்து பாகிஸ்தானுடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதை இந்தியா தடுத்து வருகிறது. இது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்ட்டிற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும்.
1960ஆம் ஆண்டு போடப்பட்ட சிந்து நதி பங்கீடு ஓப்பந்தத்தை ரத்து செய்யப்போவதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.
இம்மாதிரியான நடவடிக்கை இந்தியா நீரை கொள்ளும் நாடுகளான சீனா, நேபால் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுடனான இந்தியாவின் உறவும் பாதிக்கப்படும்.
பாகிஸ்தானுடன் வர்த்தக தொடர்பை வைத்துக் கொள்வதற்கான விலையை அதிகரிக்க இந்தியா ராஜரீக முறையில் நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்கும்.
பண மோசடிகளுக்கு எதிராக செயல்படும் நாடுகளுக்கு இடையேயான அமைப்பின் கருப்புப் பட்டியலில் பாகிஸ்தானை சேர்க்கவும் பரிந்துரைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது பாகிஸ்தான் தொடர்பான பண வர்த்தகத்தை கண்காணிப்புக்கு உள்ளாக்க வழிவகுக்கும். அது அந்நாட்டின் பண புழக்கம், க்ரேடிட் ரேட்டிங், பங்குச் சந்தை, வங்கித் துறை ஆகியவற்றை பாதிக்கும்.
ஆனால், சீனா இந்த நடவடிக்கையை தடுக்கலாம்.

ராணுவ ரீதியாக என்ன மாதிரியான நடவடிக்கையை இந்தியா எடுக்கலாம்?

இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருப்பது பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதம் மற்றும் ஆற்றல்மிக்க ராணுவம்.
இந்திய ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் சிலர், போர்தான் பழிவாங்கல் என்று கூறும் நிலையில், இதைதான் இந்திய தலைமையில் உள்ளவர்களும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் அணு ஆயுதங்களை பயன்படுத்தும் வாய்ப்புகளை சோதித்துள்ளது.
1999ஆம் ஆண்டு இருநாடுகளுக்கும் உள்ள நடைமுறை எல்லையில் பாகிஸ்தான் நுழைந்ததால் கார்கில் போர் மூண்டது. அவ்வப்போது பாகிஸ்தானுக்கு இந்திய எல்லையில் பதிலடிகளை கொடுத்துள்ளது. உரி ராணுவ தளத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலடியாக துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டது.
பிற ராணுவ வாய்ப்புகள் எல்லாம் நீண்டகாலம் எடுக்கக்கூடியவை.
பாகிஸ்தான் எல்லைக்குள் வருவதை தடுக்க புதிய பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் உளவுத்துறை கூட்டணிகளை பிற நாடுகளிடமிருந்து பெற்றுள்ளது இந்தியா.
ஆளில்லா விமானங்கள், தொழில்நுட்ப நுண்ணறிவு மேம்பாடு ஆகியவற்றில் இந்தியா முதலீடு செய்தால் பாகிஸ்தான் எல்லையில் ஊடுறுவுவதை தடுக்கலாம்.
இவை எல்லாம் இந்தியா பதிலடி கொடுக்கும் ஒரு சில வழிகளே. சமீபத்திய வரலாற்றை எடுத்து பார்க்கும்போது முற்றிலும் எதிர்பாராத சம்பவங்கள் கூட எதாவது நடக்கலாம்.
(துருவ் ஜெய்ஷங்கர், வெளிநாட்டு கொள்கைகள் குறித்து டெல்லியில் உள்ள ப்ரூக்கிங்ஸ் ஆய்வுக் கழகத்தில் ஆய்வாளராக உள்ளார் ஆஸ்திரேலியாவில் உள்ள லோயி நிறுவனத்திலும் ஆய்வாளராக உள்ளார்.)

Leave a Reply

Your email address will not be published.