பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், பயங்கரமான எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தலிபான் தீவிரவாத அமைப்பு எச்சரித்துள்ளது.
பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், பயங்கரமான எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தலிபான் தீவிரவாத அமைப்பு எச்சரித்துள்ளது. இருநாடுகளிடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் அமைதி பேச்சுவார்த்தை பாதிக்கப்படும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.மேலும் இந்த பிராந்தியத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்கிற தொனியில் இந்தியாவுக்கு தலிபான் தீவிரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்திருப்பது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது