சியாச்சின் ஹீரோ ஹவில்தார் ஏழுமலை

சியாச்சின் ஹீரோ ஹவில்தார் ஏழுமலை

சேவை எண் : 2600705W

Birth Place : அடுக்கம்பாறை(TN)

Service: Army

Last Rank: Havildar

Unit : 19 Madras

ARm/Regt : The Madras Regiment

Awards : Sena Medal

Date of Martyrdom: Feb 03, 2016

ஹவில்தார் ஏழுமலை தமிழகத்தின் அடுக்கப்பாறை என்னும் கிராமத்தை சேர்ந்தவர்.அவர் இராணுவத்தின் 19வது  பட்டாலியன் மெட்ராஸ் ரெஜிமென்டில் October 28, 1996
இணைந்தார்.அவருக்கு ஜமுனா ராணி என்ற மனைவியும் கவியரசு மற்றும் பிரியதர்சன் என்னும் இரு குழந்தைகளும் உள்ளனர்.

ஹவில்தார் ஏழுமலை highly motivated Non-Commissioned Officer (NCO) ஆவார்.தனக்கென வழங்கப்படும் எந்த வேலையையும் மனமுவந்து முன்னின்று செய்து முடிக்கக்கூடிய வீரர் ஆவார்.

அவரது ஒன்பது ஆண்டு கால இராணுவ வாழ்க்கையில் காஷ்மீர் மற்றும் வடகிழக்கில் சிறிய வீரர்கள் குழுவை வழிநடத்தில் பல ஆபரேசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

தனது இளையவர்களை உற்சாகப்படுத்தி இலக்கை நோக்கி வழிநடத்துவதிலும் , முன்னின்று தைரியமாக ஆபரேசன்களை செய்யும் தைரியமிக்க பண்பு காரணமாக சோனம் நிலைக்கு அனுப்பப்படும் வீரர்கள் குழுவில் இடம் பெற்றார்.ஸ்டீல் போன்ற நரம்புகள் மற்றும் முழு உடற்தகுதி உள்ள வீரர்கள் மட்டுமே அங்கு அனுப்பப்படுவர்.

ஹவில்தார் ஏழுமலை ஒரு கவர்திழுக்கும் பண்புகள் கொண்ட தலைவர். instructor grading in Weapon Course at Infantry School, Mhow பெற்றவர்.

அவர் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்டில் Instructor  ஆக பணிபுரிந்துள்ளார்.அந்த காலத்தில் தனது மூத்த அதிகாரிகளே புகழும் வண்ணம் மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.பல வீரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.சியாச்சின் செல்லும் குழுவில் இடம் பெறும் முன்  Unit Training Team-ல் இருந்துள்ளார்.

ஆகஸ்டு 2016 அன்று அவருக்கு வீரமரணத்திற்கு பிறகு சேனா விருது வழங்கப்பட்டது.

2016 Siachen Glacier Avalanche :

2016ல் சியாச்சின் வடக்கு பகுதியில் நடந்த பனிச்சரிவில் சிக்கிய பத்து வீரர்களுள் ஏழுமலை அவர்களும் ஒருவர்.3 பிப் 2016ல் 19,600 அடி உயரமுள்ள அந்த கேம்பை தாக்கியது பனிச்சரிவு.

அந்த நிலையை ஒரு Junior Commissioned Officer மற்றும் ஒன்பது வீரர்கள் காவல் காத்தனர்.

கேம்ப் பனிச்சரிவில் மூழ்கிய போது தகவல் அறிந்து இராணுவம் மற்றும் விமானப்படை இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டது.

உலகின் மிக உயர்ந்த போர்க்களத்தில் தங்களை ஒருபோதும் அரவணைக்காத காலநிலையில் 21,000அடி உயரம் வரை உள்ள காவல் நிலைகளை நமது வீரர்கள் பாதுகாக்கின்றனர்.இங்கு பனிச்சரிவு என்பது சாதாரணம்.பனி திரட்டல் அல்லது காலை சுளீர் வெயில் காரணமாக இந்த பனிச்சரிவுகள் நடைபெறுகின்றன.இயற்கையை வெல்ல யார் முடியும்? செங்குத்தான பனிமலைகளில் சரிவுகள் சாதாரணம்.

இந்த பனிச்சரிவுகளை பற்றி முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்க  Avalanche Study Establishment (SASE) காஷ்மீரில் பல்வேறு கண்கானிப்பாளர்களுடன் இயங்கி வருகிறது.இவர்கள் சாதகமான பனிச்சரிவு குறித்து வீரர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கின்றனர்.இருந்தாலும் அனைத்து பனிச்சரிவுகளையும் சரியாக கண்காணிக்க முடிவதில்லை.

இராணுவம் மற்றும் விமானப்படை இந்த கடும் காலநிலையில் இணைந்து தேடுதல் நடத்தி அவர்களை மீட்ட பொழுது யாரும் உயிர்பிழைத்திருக்கவில்லை.

ஆறாவது நாள் தான் அவர்களை கண்டுபிடிக்க முடிந்தது.எத்தனை நாள்கள் உயிருடன் உணவு இல்லாமல் மூச்சு விடமுடியால் அந்த பனிக்குள் இருந்தனரோ !! ஆறாவது நாள் ஒரு வீரர் ஹனுமந்தப்பா அவர்கள் மட்டும் உயிருடன் மீட்டு அவரும் பின்னர் வீரமரணம் அடைந்தார்.

ஹவில்தார் ஏழுமலை மற்றும் அந்த ஒன்பது வீரர்களுக்கும்
வீரவணக்கம்

Leave a Reply

Your email address will not be published.