காயம்பட்ட நக்சலுக்கு இரத்ததானம் செய்த சிஆர்பிஎப் வீரர்

காயம்பட்ட நக்சலுக்கு இரத்ததானம் செய்த சிஆர்பிஎப் வீரர்

இராஜ்கமல் என்ற சிஆர்பிஎப் வீரர் தான் இந்த செயலை செய்துள்ளார்.அவர் செய்த செயலுக்காக சமூக வலைதளவாசிகள் அவரை வெகுவாக புகழ்ந்து வருகின்றனர்.நக்சலுக்கு இரத்த தானம் செய்யும் அவரது புகைப்படம் வெகுவாக பாராட்டு பெற்று வருகிறது.

சிஆர்பிஎப் படையின் 133வது பட்டாலியனைச் சேர்ந்தவர் தான் இராஜ்கமல் என்ற வீரர். ஜார்க்கண்டில் 209 கமாண்டாே பட்டாலியன் நக்சல்களுடன் சண்டையிட்டனர்.இந்த சண்டையில் காயமடைந்த நக்சல் ஒருவரை உடனடியாக மருத்துவமனைக்கு வீரர்கள் கொண்டு சென்றனர்.

ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மெடிக்கல் சயின்ஸ் இன்ஸ்டியூட்டிற்கு அவரை கொண்டு சென்ற வீரர்கள் அவருக்கு இரத்தம் தேவை என்பதை மருத்துவர் கூறியவுடன் ,மறுமுறை யோசிக்காமல் தனது இரத்தத்தை வழங்க முன்வந்துள்ளார்.

சக இந்தியருக்கு உதவுவதே வீரர்களின் பணி என இராஜ்கமல் கூறியுள்ளதை பெருமையோடு தனது டிவிட்டர் தளத்தில் சிஆர்பிஎப் பதிவு செய்துள்ளது.இதை அறிந்த சிஆர்பிஎப்  Inspector General of Police Sanjay Anand Lathkar வீரரை பாராட்டியதுடன் அவருக்கு பரிசையும் அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.