காஷ்மீர் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி பற்றி பரபரப்பு தகவல்!

காஷ்மீர் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி பற்றி பரபரப்பு தகவல்!

பாதுகாப்புப் படையினர் மீது தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதி, அடில் அகமது தர், யார் என்பது தெரிய வந்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் 2 ஆயிரத்து 547 பேர் ஜம்முவில் இருந்து, 78 வாகனங்களில் பள்ளத்தாக்கு பகுதிக்கு நேற்று சென்று கொண்டிருந்தனர். வழக்கமாக ஒரே நாளில் ஆயிரம் வீரர்கள் அணிவகுத்து செல்வது வழக்கம். ஆனால் கடந்த 2, 3 நாட்களாக மோசமான வானிலை மற்றும் நிர்வாக காரணங்களால் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. அதனால்தான் வீரர்கள் ஒரே நாளில் 78 வாகனங்களில் மொத்தமாக சென்றனர்.

ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் புலவாமா மாவட்டம், அவந்திப்போரா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, தற்கொலை படை தீவிரவாதி நடத்திய, வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 44 பேர் உயிரிழந்தனர். 20 வீரர்கள் படு காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் -இ – முகமது ( Jaish-e-Mohammad) என்ற தீவரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலை நடத்தியவன் அடில் அகமது தர் என்ற பயங்கரவாதி என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த, அடில் அகமது தர், கண்டிபா என்ற பகுதியை சேர்ந்தவன். தாக்குதல் சம்பவம் நடந்த பகுதியில் இருந்து 10 கி.மீ தூரத்தில் கண்டிபா இருக் கிறது. இவன் தந்தை ரியாஸ் அகமது, சிறிய கடை ஒன்றை அங்கு நடத்தி வருகிறார். பிளஸ் டூ வரை படித்த அடில், படிப்பை பாதியிலேயே கைவிட்டுள்ளான். அவ்வப்போது அருகில் உள்ள மில் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளான். இவனது உறவினர் ஒருவர் பயங்கரவாத அமைப் பில் சேர்ந்து, பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அடிலுக்கும் பயங்கரவாத இயக்கத்தினருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவர்களின் மூளைச் சலவையில் கிறங்கிய அடில், கடந்த ஆண்டு திடீரென காணாமல் போனான். பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் – இ- முகமது பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து பயிற்சிப் பெற்றுள் ளான். அவர்கள் தற்கொலை தாக்குதலுக்கு அடிலை தயார் படுத்தியுள்ளனர். பெரிய தாக்குதல் நடத்துவதற்கு நேரம் பார்த்து இருந்துள்ளான். இதற்காக வெடிகுண்டுகளைப் பதுக்கி வைத்துள்ளான். அதன்படி இந்த தாக்குதலை நிறைவேற்றியுள்ளான். இவன், அந்த பயங்கரவாத அமைப் பின் சி பிரிவைச் சேர்ந்த பயங்கரவாதி என போலீசார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் இளைஞர்களுக்கு மூளைச் சலவை செய்து, அவர்களை தற்கொலை தாக்குதலுக்குப் பயன்படுத்துவதை, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு தொடந்து செய்து வருகிறது. 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி, பர்தீன் அகமது கான் என்ற 16 வயது சிறுவன் தற்கொலை தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டான். இவனைப் போல உள்ளூரைச் சேர்ந்த 3 பேரை அந்த பயங்கரவாத அமைப்பு, தற்கொலைக்கு பயன்படுத்தியுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.