ரைபிள்மேன் ஒவுரங்கசீப் கொல்லப்பட்ட விவகாரம்: மூன்று இராஷ்டரிய ரைபிள் வீரர்கள் கைது

ரைபிள்மேன் ஒவுரங்கசீப் கொல்லப்பட்ட விவகாரம்: மூன்று இராஷ்டரிய ரைபிள் வீரர்கள் கைது

அபித் வானி,டஜமுல் அகமது மற்றும் அடில் வானி என்ற மூன்று வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இருவர் புல்வாமா மற்றும் ஒருவர் குல்கம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.ஒவுரங்கசீப் செயல்பாடுகளை பயங்கரவாதிகளுக்கு அளித்ததாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒவுரங்கசீப் அவர்களின் நடவடிக்கைகளை பகிர்ந்து கொண்டமை குறித்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.இதன் காரணமாக தான் பயங்கரவாதிகள் அவுரங்கசீப் அவர்களை பிடித்துள்ளனர்.

ஈத் பண்டிகை கொண்டாட வீடு சென்றுகொண்டிருந்த 44வது இராஷ்டீரிய ரைபிள்சை சேர்ந்த அவுரங்கசீப் அவர்களை புல்வாமாவில் பயங்கரவாதிகள் கடத்தி கொன்றனர்.

சமீர் டைகர் போன்ற முக்கிய பயங்கரவாதிகளை வீழ்த்திய மேஜர் ரோகித் சூரி அவர்கள் குழுவில் இருந்த வீரர் தான் அவுரங்கசீப் அவர்கள்.

ராஜோரி செல்வதற்காக சோபியானில் ஒரு தனியார் வாகனத்தில் ஏறிய அவுரங்கசீப், அவர்கள் சென்ற வாகனத்தை இடைமறித்த பயங்கரவாதிகள் காலம்போரா என்ற இடத்தில் வைத்து கடத்தி சென்றனர்.துப்பாக்கி துளைத்த அவரது உடல் காலம்போரா அருகே கண்டெடுக்கப்பட்டது.

அவரது மரணம் கன்னியாகுமரி வரை எதிரொலித்தது.இந்தியாவை உலுக்கிய இந்த சம்பவத்தில் , சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகளை பிடிக்க வேண்டும் என்ற கொள்கை வலுப்பட்டது.

ஆயிரக்கணக்கானோர் அவரது இறுதி சடங்கில் பங்கேற்றனர்.

2018ல் அவரது சேவையை பாராட்டி சௌரிய சக்ரா விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.