துணை ராணுவ படையில் 76 ஆயிரம் பேருக்கு வேலை – மத்திய உள்துறை அறிவிப்பு

துணை ராணுவ படையில் 76 ஆயிரம் பேருக்கு வேலை – மத்திய உள்துறை அறிவிப்பு

துணை ராணுவ படையில் 76 ஆயிரம் பணி இடங்கள் நிரப்பும் பணி நடந்து வருவதாக மத்திய உள்துறை தெரிவித்துள்ளது.

மத்திய ஆயுதப்படை, எல்லை பாதுகாப்பு படை, இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை உள்ளிட்ட துணை ராணுவ படைகளில் மொத்தம் 76,578 பணியிடங்களை நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒதுக்கீடு 7,646 இடங்கள்.

54,953 காவலர்கள், 1,073 சப்–இன்ஸ்பெக்டர்கள், 466 உதவி கமாண்டன்டுகள், இதுதவிர இதர தொழில்நுட்ப பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் இவர்களை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் ஜனவரி மாதத்தில் தொடங்கி பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி: தினத்தந்தி

Leave a Reply

Your email address will not be published.