48 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய விமானப்படையின் சாதனை, பாகிஸ்தான் கதறல்

48 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தானுக்குள் சென்று அதிரடியான தாக்குதலை நடத்தி இந்திய விமானப்படை சாதனைப் படைத்துள்ளது.

பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்காத பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாத முகாம்களை அழித்து இந்திய விமானப்படை அந்நாட்டை கதறச்செய்துள்ளது. தாக்குதல் நடத்தப்படவில்லை என மறுக்கும் பாகிஸ்தான் பதிலடி கொடுப்போம் என கொக்கரிக்கிறது. இந்த ஆபரேஷனில் இந்திய விமானப்படை மிரேஜ் 2000 விமானங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளது. 12 விமானங்களும் பாகிஸ்தானுக்குள் சென்று அதிரடி தாக்குதலை மேற்கொண்டு பத்திரமாக திரும்பியது.

இந்திய விமானப்படையின் விமானம் ஒன்று எல்லையை தாண்டி சென்று தாக்குதல் நடத்துவது என்பது 1971-க்கு பின்னர் இப்போதுதான் நடக்கிறது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்கள் நடைபெற்றுள்ளது. இதில் பல போர்களில் பொதுவாகவே தரைப்படையே தனது திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. கார்கில் போர் வரையில் பெரிய அளவில் தரைப்படைக்கே பெரும் பங்கு இருந்தது.

1999-ம் ஆண்டு கார்கில் போர் நடைபெற்றது. இதில் இந்தியா வெற்றி பெற்றது. ஆனால் இந்திய விமானப்படையின் விமானங்கள் எல்லையைத் தாண்டக்கூடாது என வாஜ்பாய் உத்தரவிட்டுவிட்டார். இதனால் எல்லைத் தாண்டவில்லை.

பாகிஸ்தானில் இருந்து வங்காளதேசம் பிரிந்து தனிநாடான 1971-ம் ஆண்டு நடந்தபோரில் விமானப்படை அதிரடியான சேவையை மேற்கொண்டது. இப்போது 48 ஆண்டுகளுக்கு பிறகு எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை தாண்டிச் சென்று பாகிஸ்தானின் உட்பகுதிக்குள் நுழைந்து பயங்கரவாத முகாம்களை அழித்து அதிரடி தாக்குதலை நடத்தி சாதனைப்படைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.