வலுப்பெறும் கடற்படை : 40,000 கோடியில் புதிய ஆறு நீர்மூழ்கிகள் கட்ட திட்டம்

வலுப்பெறும் கடற்படை : 40,000 கோடியில் புதிய ஆறு நீர்மூழ்கிகள் கட்ட திட்டம்

இந்தியாவில் ஆறு புதி நீர்மூழ்கிகள் கட்ட அனுமதி வழங்கியது Ministry of Defence.கடந்த வியாழன் அன்று இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.இந்த புதிய ஆறு நீர்மூழ்கிகளும் இந்திய கடற்படையின் வலிமையினை அதிகரிக்க உதவும்.

சுமார் 40,000 கோடிகள் செலவில் இந்த ஆறு நீர்மூழ்கிகளும் கட்டப்படும்.ஆறு நீர்மூழ்கிகளும் பி-75ஐ திட்டத்தின் கீழ் இந்தியாவில் கட்டப்பட உள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு கொள்முதல் கூட்டத்தின் உயரதிகாரிகள் இதற்கான அனுமதியை வழங்கினர்.

இவை தவிர இராணுவத்திற்காக 5,000 Milan 2T anti-tank guided missiles வாங்கப்பட உள்ளது.

மேலும் அரிகந்த நீர்மூழ்கிக்காக Heavy weight torpedoes கள் வாங்கப்பட உள்ளன.மேலும் தற்போது கட்டப்பட்டு வரும் கல்வாரி நீர்மூழ்கிகளும் டோர்பிடோக்கள் இல்லாமல் தான் இயங்கி வருகின்றன.விரைவில் புது டோர்பிடோக்கள் வாங்க டென்டர் விடப்பட உள்ளன

ஏற்கனவே பல வருட தாமதத்திற்கு பிறகு  Defence Ministry  heavyweight torpedoe-க்களை வாங்க பேச உள்ளது.இந்த டோர்பிடோக்கள்  INS Arihant மற்றும் ஆறு Scorpene-class submarine-களுக்காக வாங்கப்படுகிறது.

இதற்கென உயர்மட்ட குழு கூடி
அரிகந்த் மற்றும் கல்வாரி வகை நீர்மூழ்கிகளுக்காக  heavy-weight torpedoes வாங்குவது குறித்து விவாதிக்க உள்ளது.
 Kalvari class நீர்மூழ்கிகள் என அழைக்கப்படும்  Scorpene submarine-கள் பிரான்ஸ் உதவியுடன் இந்தியாவின்  Mazagon Dockyards Limited நமது கடற்படைக்காக கட்டி வருகிறது.

இதற்கான  tender அறிவிப்பு மற்றும் டோர்பிடோக்கள் எண்ணிக்கை குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட உள்ளது.

நமது  DRDO ஒரு  heavyweight torpedo ஐ மேம்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பத்து வருடங்களாக டோர்பிடோ வாங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஏற்கனவே இத்தாலிய நிறுவனமான WASS இருந்து வாங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு அதன் பின் ஊழல் புகார்கள் காரணமாக நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எதிரியின் நீர்மூழ்கி மற்றும் போர்க்கப்பல்களுக்கு எதிராக நமது நீர்மூழ்கிகள் செயல்பட  heavyweight torpedoes அவசியம் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published.