காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த தாக்குதலின்போது, துணைக் கண்காணிப்பாளர் மற்றும் ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்தனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி சிஆர்பிஎப் வீரர்களின் வாகனம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்தக் கொடூர தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதனிடையே புல்வாமா தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது பதிலடி தர நமது படைகளுக்கு முழு சுதந்திரம் தரப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குல்காம் மாவட்டம் துரிகாம் பகுதியில் பயங்கரவாதிகள் மறைந்திருப்பதாக தகவல் வந்த நிலையில், ராணுவத்தினரும், காஷ்மீர் போலீஸாரும் அவ்விடத்தை சுற்றி வளைத்தனர். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.

பாதுகாப்படை வீரர்களும் பதில் தாக்குல் நடத்‌தினர். இதில் ஜெயிஷ் இ முகம்மது அமைப்பைச் சேர்ந்த மூவர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அமன் தாக்கூர் மற்றும் ராணுவ வீரர் ரன்வீர் உயிரிழந்தனர்

Leave a Reply

Your email address will not be published.