துணை ராணுவத்துடன் துப்பாக்கிச்சண்டை – 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

துணை ராணுவத்துடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில், 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டு இயக்க அதிருப்தியாளர்கள் இந்திய மக்கள் விடுதலை முன்னணி என்ற பெயரில் தனிக்குழுவாக இயங்கி வருகிறார்கள்.

இவர்களும் அவ்வப்போது வன்செயல்களில் ஈடுபட்டு, மாநில அரசுக்கு தலைவலியாக திகழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், கும்லா மாவட்டத்தில் காம்தாரா என்ற இடத்தில் அவர்களில் சிலர் பதுங்கி இருந்து சதித்திட்டம் தீட்டி வருவதாக துணை ராணுவத்தினருக்கு (சி.ஆர்.பி.எப்.) ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று அந்தப் பகுதிக்கு அவர்கள் சென்று சுற்றி வளைத்தனர். ஆனால் அவர்களைப் பார்த்ததும் மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். துணை ராணுவத்தினரும் அவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தனர்.

இரு தரப்பிலும் நீண்ட நேரம் துப்பாக்கிச்சண்டை நடந்தது. அதன் முடிவில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சம்பவ இடத்தில் இருந்து 2 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளும், ‘315’ ரக துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டன.

Thanthi

Leave a Reply

Your email address will not be published.