பாகிஸ்தானில் பாலாகோட் மலை உச்சியில் ஐந்து நட்சத்திர முகாமில் நள்ளிரவில் விழித்துக் கொண்டிருந்த தீவிரவாதிகள் சற்று அசந்தபோது அதிகாலை 3 மணிக்கு தாக்கி இந்தியா அதிரடி வேட்டையில் ஈடுபட்டது. இதில் 350 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீலிருந்து நூற்றுக்கணக்கான பாக். தீவிரவாத கொரில்லா படையினர் மற்றும் அவர்களது பயிற்சியாளர்கள் பாலாகோட் மலை உச்சியில் உள்ள மீது ஐந்து நட்சத்திர ரிசார்ட் பாணி முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.
இன்று அதிகாலை நடைபெற்ற தாக்குதலில் புதிய முகாமுக்கு மாற்றப்பட்ட 325 தீவிரவாதிகளும் 25லிருந்து 27 பயிற்சியாளர்களும் கொல்லப்பட்டனர்.
இவர்கள் கடந்த பிப்ரவரி 14 அன்று இந்திய அரசின் மத்திய துணை ராணுவப் படையைச் சேர்ந்த 40 வீரர்களை தற்கொலை தாக்குதலில் கொன்றதற்குப் பின்னணியாகச் செயல்பட்டவர்கள் ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள்.
இத்தாக்குதலின்போது தீவிரவாதிகள் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்ததாகவும் பயிற்சி தீவிரவாதிகள் சற்று அசந்த நேரத்தில் இத்தாக்குதல் நடைபெற்றதாகவும் நம்பத்தகுந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
இத்தாக்குதல் குறித்து பாகிஸ்தானிய பாதுகாப்புத்துறைக்கு எந்தவித துப்பும் கிடைக்கப் பெறவில்லை என்றும் தங்கள் நாட்டுக்குள் ஆழமாக ஊடுருவி முகாம்களில் நடத்தப்பட்ட இந்த அதிரடி வேட்டை எதிர்பாராத ஒன்று என்றும் பாக். அரசாங்கத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இந்திய உளவுத்துறை ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாதக் குழுக்கள் பல பயிற்சி தீவிரவாதிகளை பாலாகோட் முகாமுக்கு இடம் மாற்றியதையும் அதன் உச்சபட்ச நடவடிக்கைகள் பற்றியும் துப்புகளைப் பெற்றுள்ளது. இந்த முகாமில் 500லிருந்து 700 பேர் தங்கும் வசதிகள் கொண்டதாகவும் இங்கு ஒரு நீச்சல் குளமும் சமையல் காரர்களும் துப்புரவுப் பணியாளர்களும் இங்கு இருப்பதாகவும் இந்திய உளவுத்துறை தகவல்கள் கிடைத்தன.
மேற்கு மற்றும் மத்திய ராணுவப் படைகள் பல்வேறு விமானத் தளங்களிலிருந்து போர் விமானிகளுடன் கூடிய விமானங்கள் புறப்பட்டுச் சென்றன. அதே சமயம் அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்பது பற்றி பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகளுக்குக் குழப்பமே மேலிட்டது. இந்நேரத்தில்தான் ஒரு சிறிய விமானக்குழு ஒன்று பாலாகோட் பறந்து சென்றது. அங்கு எப்போதும் விழித்துக்கொண்டே இருக்கும் தீவிரவாதிகள் சற்று அசந்தபோது அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் இந்திய விமானப் படையினரால் குண்டுவீசி தாக்கி அழிக்கப்பட்டனர்.,
அவர்கள் பாலாகோட்டை இலக்காக வைத்துதான் வருகிறார்கள் என்பது பற்றிய எந்த யோசனையும் பாக்.பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இல்லை. ஆனால் அந்த அதிகாரிகளால் வளர்ந்துவரும் அந்த முகாம் தாக்கி அழிக்கப்பட்ட இடிபாடுகளை மட்டுமே படங்களில் பார்க்க முடிந்தது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் தீவிரவாத முகாம்களைக் குண்டுவைத்து தாக்கியதைப் பற்றிய பாதுகாப்புத்துறை ஆதாரங்கள் உறுதிப்படுத்தியுள்ள நிலையிலும் இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வரவில்லை.