Breaking News

Day: February 28, 2019

இந்திய ராணுவம் எதற்கும் தயார் – முப்படை அதிகாரிகள் கூட்டாக பேட்டி

February 28, 2019

இந்திய ராணுவம் எந்த சவாலையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கிறது என முப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல்லை நிலவரம் மற்றும் பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக முப்படை அதிகாரிகள் ஆர்.ஜே.கே.கபூர், சுரேந்திர சிங் மெஹல், தல்பீர் சிங் ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினர். அவர்கள் கூறும்போது, “விமானப்படை வீரர் அபிநந்தன் தற்போது பாகிஹானின் ராவல் பிண்டி ராணுவ முகாமில் தங்கவைப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் லாகூரில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் ஒப்படைக்கப்படுவார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. லாகூரில் விமானம் […]

Read More

அபிநந்தன் : இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் நாளை விடுவிப்பு – இம்ரான் கான்

February 28, 2019

இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார் என்றுபாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானப்படை புதன்கிழமை தாக்குதல் நடத்தியபோது இந்திய – பாகிஸ்தான் போர் விமானங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு, அதில் ஒரு இந்திய விமானம் வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அந்த வீழ்த்தப்பட்ட விமானத்தில் இருந்த இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்மா-வை பாகிஸ்தான் தன் பிடியில் எடுத்தது. முன்னதாக, அபிநந்தன் வர்மாவை ஒரு கும்பல் தாக்கும் படங்கள் […]

Read More

பாகிஸ்தானில் உள்ள விங் கமாண்டர் அபிநந்தன் விரைவில் விடுவிக்கப்படுவார் என தகவல்

February 28, 2019

பாகிஸ்தானில் உள்ள விங் கமாண்டர் அபிநந்தன் விரைவில் விடுவிக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி, நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய விமானப்படை ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்களை அழித்தது. இதையடுத்து நேற்று காலை இந்திய எல்லைக்குக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் போர் விமானத்தை […]

Read More

போர் விமானங்கள், ராணுவ வாகனங்களுக்கு 500 டேங்கர் லாரிகளில் எரிபொருள் விரைகிறது

February 28, 2019

பாகிஸ்தானுடன் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில், போர் விமானங்கள் மற்றும் ராணுவ வாகனங்களுக்கு எரிபொருள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடி திட்டம் வகுத்துள்ளன. காஷ்மீர் மாநிலத்திலும், பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய இதர மாநிலங்களிலும் எரிபொருள் சேமிப்பு கிடங்குகள் உள்ளன. அங்கு விமான எரிபொருள் மற்றும் டீசலை நிரப்புவதற்காக 500 டேங்கர் லாரிகளில் எரிபொருள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போதிய நாட்களுக்கு தேவையான அளவுக்கு எரிபொருள் நிரப்பப்பட உள்ளது.

Read More

இந்திய விமானி அபிநந்தனை உடனடியாக பத்திரமாக ஒப்படைக்க வேண்டும்

February 28, 2019

 இந்திய விமானி அபிநந்தனை உடனடியாக பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் – பாக் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம், பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் நேரில் வலியுறுத்தல். * இந்தியாவிற்கான பாக்.துணை தூதரை, நேற்று நேரில் அழைத்து பேசிய நிலையில் மத்திய அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கை * இந்திய விமானி அபிநந்தனை பத்திரமாக மீட்க தூதரக ரீதியான நடவடிக்கையை துரிதப்படுத்தி உள்ளது மத்திய அரசு

Read More

காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்; இந்திய ராணுவம் பதிலடி

February 28, 2019

காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவ வீரர்களின் வாகனங்கள் மீது ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி வெடிகுண்டு ஏற்றிய சொகுசு காரை கொண்டு மோதி வெடிக்க செய்ததில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக நேற்று முன்தினம் இந்திய தரப்பில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, பாகிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் முகாம்கள் […]

Read More

பாலகோட்டில் விமானப் படைகள் தாக்குதல்; இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு: தீவிரவாத முகாம்களை மூட பாகிஸ்தானுக்கு அறிவுரை

February 28, 2019

பாகிஸ்தானில் இந்திய விமானப்படைகள் தாக்குதல் நடத்திய விவகாரத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்துள்ளது. மேலும் தீவிரவாத முகாம்களை மூடவேண்டும் என்றும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை வழங்கியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பாகிஸ்தானில் இந்திய விமானப் படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்துள்ளன. இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி ஆகியோருடன் நான் பேசினேன். […]

Read More

மசூத் அசாருக்கு எதிராக உலகளவில் பயண தடை, சொத்துகளை முடக்க ஐ.நா.விடம் வலியுறுத்தல்

February 28, 2019

அமெரிக்கா உள்பட 3 நாடுகள் மசூத் அசாருக்கு எதிராக உலகளவில் பயண தடை, சொத்துகளை முடக்க ஐ.நா.விடம் கோரிக்கை விடுத்துள்ளன. காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டம் அவந்திப்போரா பகுதியில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் கடந்த 14ந்தேதி சென்று கொண்டிருந்த துணை ராணுவ வீரர்களின் வாகனங்கள் மீது ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி வெடிகுண்டு ஏற்றிய சொகுசு காரை கொண்டு மோதி வெடிக்க செய்ததில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகம்மது […]

Read More

இந்திய விமானப்படை விமானியை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு வலியுறுத்தல்

February 28, 2019

சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்திய விமானி அபினந்தனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தியுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரேடாரில் நேற்று காலை பாகிஸ்தானின்  எப் 16 ரக விமானங்கள் 10 என்ற எண்ணிக்கையில் நவ்ஷாரா விமானதளம் நோக்கி வருவது கண்டறியப்பட்டது. இதையடுத்து எஸ் யூ 30 எம் கே ஐ மற்றும் மிக் 21 வகையைச் சேர்ந்த 2 விமானங்கள் ஸ்ரீநகர் மற்றும் அவந்திப்புரா விமான ஓடுதளத்தில் இருந்து புறப்பட்டன. இந்திய வான்பரப்பில் நுழைந்த பாகிஸ்தானின் […]

Read More