Day: February 27, 2019

இந்திய கடற்படைக்கு புதிதாக 3 கப்பல்கள் – பாதுகாப்புத்துறை கூட்டத்தில் முடிவு

February 27, 2019

2700 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலமையில் பாதுகாப்பு உபகரணங்கள் கையாளும் குழுவின் (Defence Acquisition Council) கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 2700 கோடி ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்திய கடற்படைக்கு புதிதாக 3 பயிற்சி கப்பல்கள் வாங்க முடிவு எடுக்கபட்டுள்ளன. அந்தக் கப்பல்கள் […]

Read More

பாகிஸ்தான் மீது தாக்குதல் – எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும் – இந்தியாவுக்கு தலீபான் தீவிரவாதிகள் எச்சரிக்கை

February 27, 2019

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், பயங்கரமான எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தலிபான் தீவிரவாத அமைப்பு எச்சரித்துள்ளது. பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், பயங்கரமான எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தலிபான் தீவிரவாத அமைப்பு எச்சரித்துள்ளது. இருநாடுகளிடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் அமைதி பேச்சுவார்த்தை பாதிக்கப்படும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.மேலும் இந்த பிராந்தியத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. பாகிஸ்தான் […]

Read More

காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விபத்து 6 வீரர்கள் உயிரிழப்பு

February 27, 2019

காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விபத்துக்குள்ளானதில் விமானப்படை வீரர்கள் 6 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானுக்குள் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக பாகிஸ்தான் ராணுவம், இந்தியா மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்தியா–பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் நிலவுகிறது. இந்திய எல்லையில் வீரர்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். விமானப்படை கண்காணிப்பை தீவிரமாக்கியுள்ளது. அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் புட்காம் பகுதியில் கண்காணிப்பு பணியில் எம்.ஐ.–17 ரக ஹெலிகாப்டர் ஈடுபட்டு வந்தது. அந்த […]

Read More

வீரரை பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் – பாகிஸ்தானுக்கு இந்திய அரசு வேண்டுகோள்

February 27, 2019

பாகிஸ்தான் வசமுள்ள இந்திய விமானப்படை வீரரை பத்திரமாக விடுவிக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் நேற்று காலை புகுந்த இந்திய விமானப் படை துல்லிய தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது. இதனையடுத்து பாகிஸ்தான் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் எல்லையில் விமானப் படையினர் உஷார்படுத்தப்பட்டனர். இருப்பினும், இன்று காலை எல்லைக்குக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய ராணுவம் விரட்டியடித்தது. அந்த […]

Read More

பாகிஸ்தான் பிடியில் இந்திய விமானப்படை விமானி அபினந்தன்: வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்தது

February 27, 2019

இந்திய விமானப்படை விமானி அபினந்தன் பாகிஸ்தான் ராணுவ பிடியில் சிக்கியதை வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் இதனை உறுதிப்படுத்தினார். கடந்த 14-ம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாத முகாம்களில் நேற்று (பிப் 27) தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இன்று காலை, பாகிஸ்தான் இந்திய எல்லையில் தாக்குதலில் ஈடுபட்டது. […]

Read More

பேச்சுவார்த்தைக்கு வருமாறு பாக்., பிரதமர் இம்ரான் கான் இந்தியாவுக்கு அழைப்பு

February 27, 2019

இரு தினங்களாக எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று பிற்பகலில் செய்தியாளர்களைச் சந்தித்த இம்ரான் கான், தீவிரவாதம் தொடர்பாக எவ்வித பேச்சுவார்த்தையையும் நடத்த தாங்கள் தயார் என குறிப்பிட்டுள்ளார். Polimer

Read More

எல்லையில் பதற்றம் – தயார் நிலையில் மத்திய படைகள்

February 27, 2019

எல்லையில் நிலவும் பதற்றம் காரணமாக, மத்திய படைகள் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது எல்லையில் நிலவும் பதற்றம் காரணமாக, மத்திய படைகள் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்மட்டக்குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், ரா அமைப்பு, தேசிய பாதுகாப்பு தலைவர்கள், மத்திய உள்துறை செயலாளர்கள், பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் ஜோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளதால் அடுத்த கட்ட நடவடிக்கை […]

Read More

தேசிய அணுசக்தி ஆணையத்தின் கூட்டத்திற்கு இம்ரான்கான் ஏற்பாடு

February 27, 2019

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதை அடுத்து, அணு ஆயுத பிரயோகம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கும் ஆணையத்தின் கூட்டத்திற்கு பிரதமர் இம்ரான்கான் அழைப்பு விடுத்துள்ளார். பாகிஸ்தானில் நேற்று நடைபெற்ற அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில் பாகிஸ்தானின் தேசிய அணுசக்தி ஆணையத்தின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Read More

2 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதா பாகிஸ்தான்? – பாக். ராணுவ ஜெனரல் டிவிட்டரில் அறிவிப்பு

February 27, 2019

பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த 2 இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ராணுவ ஜெனரல் ஆசிப் கஃபூர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். அவற்றில் ஒரு விமானம் இந்திய கட்டுப்பாட்டு காஷ்மீர் பகுதியில் விழுந்ததாகவும், மற்றொன்று பாகிஸ்தான் கட்டுப்பாட்டு பகுதியில் விழுந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய விமானி ஒருவரை கைது செய்திருப்பதாகவும், விமானம் விழுந்த பகுதியில் இரு விமானிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஆசிப் கஃபூர் தெரிவித்துள்ளார். இதனால் பாகிஸ்தான் இந்தியா இடையே போர் பதற்றம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதாக […]

Read More

காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைந்து தாக்க முயன்ற பாகிஸ்தான் விமானம்: சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்

February 27, 2019

பாகிஸ்தான் பகுதிக்குள் புகுந்து தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை தகர்த்துள்ள நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் விமானம் இன்று இந்திய எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்த முயன்றது. பாகிஸ்தான் விமானங்களில் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது  நேற்று  தாக்குதல் நடத்தின. 12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டைத் தீவிரவாத முகாம்கள் […]

Read More