Breaking News

Day: February 26, 2019

250 CRPF வீரர்களுக்கு வெடிகுண்டு கண்டறியும் பயிற்சி

February 26, 2019

புல்வாமா தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் உளவுத் தகவல்களை பெறுவது தொடர்பான சி.ஆர்.பி.எஃப்.பின் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதன் இயக்குநர் ராஜீவ் ராஜ் பட்நாகர் தெரிவித்துள்ளார். தாங்கள் தீவிரவாதிகளுக்கு எதிராகவே போராடுவதாகவும் மக்களுக்கு எதிராக அல்ல என்றும் தெரிவித்த அவர், இதுபோன்ற விவகாரங்களில் மக்கள் தங்களுக்கு உதவவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு சி.ஆர்.பி.எஃப் படைப்பிரிவிலும் வெடிகுண்டு நிபுணர் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் தேர்வு செய்யப்பட்ட சுமார் 250 வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட […]

Read More

விமானப்படை தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் -இந்திய வெளியுறவுத்துறை செயலர்

February 26, 2019

விமானப்படை தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே தெரிவித்து உள்ளார். பாகிஸ்தான் மீது நடந்த விமானப்படை தாக்குதல் பற்றி இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது;- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் பற்றி பாகிஸ்தானுக்கு தகவல் தந்தோம். பலமுறை தகவல் தந்தும் பயங்கரவாத முகாம்களை அழிக்க பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜெய்ஷ் – இ- முகமது […]

Read More

இந்திய எல்லைப் பகுதியில் உஷார் நிலையில் இருக்க பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்

February 26, 2019

தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், எல்லையில் அமைந்துள்ள இந்திய விமானப்படை தயார் நிலையில் இருக்கும்படி பாதுகாப்புத்துறை அறிவுறுத்தி உள்ளது.கடந்த 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கம் பொறுப்பேற்றுக்கொண்டது. இந்நிலையில், இந்திய விமானப்படையைச் சேர்ந்த போர் விமானங்கள், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பால்கோட் என்ற […]

Read More

எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல் : JEM அமைப்பின் கட்டுப்பாட்டு அறையும் தகர்ப்பு

February 26, 2019

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதே எல்லையை ஒட்டியுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், பயங்கரவாத இயக்கங்கள் முகாம்கள் அமைத்து செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் உள்ளபயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்திய விமானப்படையின் மிராஜ் -2000 விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.  12 போர் விமானங்கள், இந்த தாக்குதலில் ஈடுபட்டன. இந்த அதிரடி தாக்குதலில், பலாகோட், சகோதி, முசாப்பர்பாத் ஆகிய இடங்களில் உள்ள பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன. ஜெய்ஷ் […]

Read More

இந்திய விமானப்படையை எதிர்கொள்ள முடியாமல் பயந்து ஓடிய பாகிஸ்தான் விமானங்கள்

February 26, 2019

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், பயங்கரவாத இயக்கங்கள் முகாம்கள் அமைத்து செயல்பட்டு வருகின்றன. இன்று அதிகாலை 3.30 மணியளவில்  எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்திய விமானப்படையின் மிராஜ்-2000 விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. 12 போர் விமானங்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டன. இந்த அதிரடி தாக்குதலில், பலாகோட், சகோதி, முசாபர்பாத் ஆகிய இடங்களில் உள்ள பயங்கரவாத  முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன. ஜெய்ஷ் இ முகம்மது […]

Read More

இந்திய விமானப்படை தாக்குதல்:200-300 தீவிரவாதிகள் அழிப்பு

February 26, 2019

கடந்த 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கம் பொறுப்பேற்றுக்கொண்டது. இந்நிலையில், இந்திய விமானப்படையைச் சேர்ந்த போர் விமானங்கள், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பால்கோட் என்ற இடத்தில் நுழைந்து பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு 12 மிராஜ் 2000 ஜெட் விமானங்கள் […]

Read More

பிரான்ஸ் தயாரிப்பான மிராஜ் 2000 விமானம் : ஒரு பார்வை

February 26, 2019

பிரான்ஸ் தயாரிப்பான மிராஜ் 2000 விமானம் : ஒரு பார்வை இந்தியாவின் மிராஜ் விமானம் கொள்முதல் குறித்து நான் அடிக்கடி கேள்விப்பட்ட விசயம் அன்றையை இராணுவ பட்ஜெட்டை விட இந்த கொள்முதல் ஒப்பந்தத்திற்கான பணம் அதிகமென.விமானப் படைக்கு மிராஜ் 2000 பிடித்துவிட்டது.அதன் திறன் பிடித்துவிட கொள்முதல் செய்ததாக தகவல் படித்த நியாபகம். மிராஜ் ஒரு பலபணி ஒற்றை என்ஜின் கொண்ட நான்காம் தலைமுறை விமானம்.இது பிரான்சின் டஸ்ஸால்ட் நிறுவனத் தயாரிப்பு.என்னது ? ஆம்..நாம் தற்போது வாங்கியுள்ள ரபேல் […]

Read More

இந்தியாவின் தாக்குதலை உறுதி செய்த பாகிஸ்தான் இராணுவம்

February 26, 2019

இந்திய ராணுவ விமானங்கள் பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவியது உண்மைதான் என்றும் இதனால் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் பாகிஸ்தான் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையொட்டிய பயங்கரவாதிகள் முகாம் மீது 1000 கிலோ அளவிலான குண்டுகளை இந்திய ராணுவம் வீசியுள்ளது. இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளின் முகாம் […]

Read More

300 பயங்கரவாதிகள் பலி?

February 26, 2019

ஆக்கிரமிப்பு காஷ்மீரில், இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.காஷ்மீரில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்ததற்கு பதிலடியாக இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிராஜ் 2000 வகை போர் விமானங்கள், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது, இன்று காலை 3.30 மணயளவில் தாக்குதல் நடத்தியுள்ளனர். புல்வாமாவில் தாக்குதலுக்கு பின், இந்திய அளித்த பதிலடியில் பயங்கரவாதிகளுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஆய்வு நடந்து வருகிறது.இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் […]

Read More

12 மிராஜ் விமானங்கள்,1000கிகி குண்டுகள்: கூண்டோடு அழிந்த பயங்கரவாதி முகாம்கள்

February 26, 2019

12 மிராஜ் விமானங்கள்,1000கிகி குண்டுகள்: கூண்டோடு அழிந்த பயங்கரவாதி முகாம்கள் 12 மிராஜ் 2000 விமானங்கள் 1000கிகி குண்டுகளை பயங்கரவாத இலக்குகள் மீது வீசி அழித்ததாக தகவல்…எல்லையை தாண்டி சென்று தாக்கியுள்ளன. மிராஜ் விமானங்கள் பயங்கரவாத முகாம்களை தாக்கி முற்றிலும் அழித்துள்ளன. 3.30 மணி பிப்ரவரி 26 அன்று இந்திய மிராஜ் விமானங்களின் குழு ஒன்று இந்திய எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்ததாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு முன்னதாக பாக் […]

Read More