புல்வாமா தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் உளவுத் தகவல்களை பெறுவது தொடர்பான சி.ஆர்.பி.எஃப்.பின் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதன் இயக்குநர் ராஜீவ் ராஜ் பட்நாகர் தெரிவித்துள்ளார்.
தாங்கள் தீவிரவாதிகளுக்கு எதிராகவே போராடுவதாகவும் மக்களுக்கு எதிராக அல்ல என்றும் தெரிவித்த அவர், இதுபோன்ற விவகாரங்களில் மக்கள் தங்களுக்கு உதவவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஒவ்வொரு சி.ஆர்.பி.எஃப் படைப்பிரிவிலும் வெடிகுண்டு நிபுணர் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் தேர்வு செய்யப்பட்ட சுமார் 250 வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக போலீசாரும் உளவு அமைப்புகளுக் தங்களுக்கு நம்பகமான தகவல்களை அளித்தாலும் சி.ஆர்.பி.எஃப்.பின் உளவறியும் திறனை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருதாகவும் அவர் கூறினார்.
polimer