பாகிஸ்தானுக்கு விமானத்தை கடத்தப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மும்பையிலுள்ள ஏர் இந்தியா விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர், இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்தப் போவதாக மிரட்டல் விடுத்தான். இதையடுத்து அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகள், உடைமைகள் முழுமையான பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்க வேண்டும் என விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. வாகன […]
Read Moreஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் இன்று மாலை அத்துமீறி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதுதவிர, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களும் உரிய பதிலடி தந்து வருகின்றனர். அவ்வகையில், ஜம்மு பகுதிக்குட்பட்ட ரஜோரி மாவட்டம், நவ்ஷேரா செக்டர் பகுதியில் உள்ள இந்திய கண்காணிப்பு சாவடிகளின் மீது இன்று […]
Read Moreகாஷ்மீர் மாநிலத்தில் ஒரே நாள் இரவில் நூற்றுக்கும் மேற்பட்ட பிரிவினைவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காஷ்மீரில் தேர்தலை அச்சுறுத்தல் இன்றி, வெளிப்படைத் தன்மையுடன் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், தேர்தலுக்கு எதிரான பிரச்சாரங்கள் அனுமதிக்கப்படமாட்டாது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்காக காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ள போலீசார், நேற்று ஒரே நாள் இரவில் நடைபெற்ற சோதனைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பிரிவினைவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
Read Moreஅமெரிக்காவின் நியூயார்க்கில் பாகிஸ்தான் தூதரகத்தை இந்திய வம்சாவளிகள் முற்றுகையிட்டனர். அமெரிக்காவின் நியூயார்க்கில் பாகிஸ்தான் தூதரகத்தை இந்திய வம்சாவளிகள் முற்றுகையிட்டனர். சமீபத்தில் நடைபெற்ற புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிப்பதாக குற்றம்சாட்டிய இந்திய வம்சாவளிகள், கைகளில் பதாகைகள் ஏந்தியபடி, பாகிஸ்தானிற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
Read Moreஇந்தியா எந்த மாதிரியான தாக்குதல் நடத்தினாலும், அதற்கு முழு வீச்சில் பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. சம்மந்தப்பட்டிருப்பதாக இந்திய ராணுவ தளபதி சமீபத்தில் கூறியிருந்தார். இந்த நிலையில் ராவல்பிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் அசீப், போர் தொடங்க பாகிஸ்தானுக்கு விருப்பமில்லை என்றார். ஆனால், இந்தியா ஏதாவது தாக்குதல் நடத்த திட்டமிட்டால் அதற்கு முழுவீச்சில் பதிலடி கொடுக்க பாகிஸ்தான் தயாராக […]
Read Moreபெங்களூரில் நடைபெற்று வரும் விமான கண்காட்சி கார் பார்க்கிங் பகுதியில் தீவிபத்து ஏற்பட்டது இதில் 100 கார்கள் சேதம் அடைந்தன. பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி கடந்த 20-ந் தேதி பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் தொடங்கியது. ராணுவத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் வானில் சாகசங்களை நிகழ்த்துகின்றன. இன்று கண்காட்சியின் 4-வது நாள் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. அப்போது கார் பார்க்கிங் பகுதியில் திடீரென தீவிபத்து […]
Read Moreபேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, தேஜஸ் போர் விமானத்தில் இன்று பறந்தார். மத்திய பொதுத்துறை நிறுவனமான எச்.ஏ.எல் நிறுவனம் சார்பில் நடத்தப்படும் ‘ஏரோ இந்தியா – 2019’ சர்வதேச விமான கண்காட்சி பெங்களூ ரில் நடந்து வருகிறது. அங்குள்ள எலஹங்கா விமான படை தளத்தில் நடக்கும் இந்தக் கண்காட்சி, இரண்டு வருடத்துக்கு ஒரு முறை நடப்பது வழக்கம். இக்கண்காட்சியில், 22 நாடுகளின் 61 அதிவேக போர் விமானங்களும், 365 நிறுவனங்களின் கண்காட்சி மையங்களும் இடம் பெற்றுள்ளன. இங்கு, ருத்ரா, […]
Read Moreஜெய்ஷ் இ முகமது இயக்கத் தலைமையகத்தை கைப்பற்றிவிட்டதாக அறிவித்த பாகிஸ்தான், அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் அந்த தகவலை அரசு இணையதளத்தில் இருந்து நீக்கியுள்ளது. காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றது. புல்வாமா தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா உட்பட […]
Read Moreஜம்மு காஷ்மீரில் ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் தலைவர், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்டோர் நேற்று நள்ளிரவு திடீரென போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். போலீஸாரின் இந்தக் கைது நடவடிக்கை தன்னிச்சையானது. மாநிலத்தில் பதற்றத்தை இன்னும் அதிகரிக்கும் என்று முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், 100 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் என்ன காரணத்துக்காக இவர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியாமல் பதற்றமான […]
Read Moreஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகருக்கு, 100 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஆகாய மார்க்கமாக அனுப்பி வைக்கப்பட்டனர். புல்வாமா பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் ((Yasin Malik)) கைதை தொடர்ந்து தலைநகரில் பதற்றம் சூழ்ந்துள்ளது. பாதுகாப்புப் படையினருடன் இணைந்து, அம்மாநில போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், அவசரமாக துணை ராணுவப் படையினரை அங்கு அனுப்பி வைக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதை அடுத்து 100க்கும் […]
Read More