இரஷ்யாவிடம் இருந்து 21 MiG-29 விமானங்களை வாங்க உள்ள இந்தியா?
சரிந்து வரும் விமானப்படையின் பலத்தை மீட்க Russia விடம் இருந்து 21 MiG-29 fighter aircraft வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இவை 1980களில் தயாரிக்கப்பட்டவை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ThePrint செய்தி நிறுவனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.இந்தியா வேண்டும் வண்ணம் இந்த விமானங்களை upgrade செய்து தர உள்ளதாக இரஷ்ய கூறியுள்ளதாக அந்த செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
“இரஷ்யா நிர்ணயித்துள்ள விலை நல்லதாக உள்ளது.நாம் முன்னதாக மிக்-29 விமானம் வாங்கி காலத்தில் இந்த விமானங்கள் தயாரிக்கப்பட்டாலும் , they have never flown,” என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இது எந்த அளவுக்கு சாத்தியமாக உள்ளது என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.தற்போது ஏற்கனவே படையில் உள்ள மிக்-29 விமானங்களை பற்றி சிறிது தகவல்கள் காணலாம்.
தற்போது இந்தியா மூன்று squadrons MiG-29 விமானங்களை இயக்கி வருகிறது. twin-engine single-seat air superiority fighter aircraft தான் இந்த மிக்-29 விமானங்கள்.ஒரு ஸ்குவாட்ரனை பொருத்த வரை 18 aircraft இருக்கும்.
தற்போது விமானப் படை இந்த விமானங்களை நவீனமயாக்கி வருகிறது.
தற்போது மிக்-29ன் structural மற்றும் அனைத்து ஏவியோனிக்ஸ் நவீனப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.புதிய weapons package பெற உள்ளது.
புதிய air-to-air refuelling ( வானில் எரிபொருள் நிரப்புதல்) திறனுடன் மிக் 29 முன்னை விட அதிக தூரம் பறக்க இயலும்.இருமுனை போரை மனதில் வைத்து விமானப் படை முழுவீச்சில் பணிகளை செய்து வருகிறது.இந்தியாவை பொருத்த வரை இருமுனை போர் சாத்தியமே…
இந்த புதிய upgraded MiG-29 விமானம் புதிய திறன் அமைப்புகளை பெற்றிருக்கும். glass cockpit with digital screens விமானத்தில் இணைக்கப்படும்.
இந்த புதிய upgraded aircraft விமானங்களை air-to-ground, air-to-air மற்றும் even anti-shipping நடவடிக்கைகளில் ஈடுபடுத்தலாம்.
இந்த மூன்று ஸ்குவாட்ரான் மிக்-29 விமானங்களில் இரு ஸ்குவாட்ரான் அதம்பூர் தளத்திலும் மற்றும் ஒன்று ஜாம்நகர் தளத்திலும் இருந்தும் செயல்படுகிறது.
மேலும் சில தகவல்படி மேலதிக Su-30 MKI ஆர்டர் Hindustan Aeronautics Ltd (HAL) க்கு வழங்கப்படலாம்.இவை தவிர இதுவரை விபத்துக்குள்ளான ஒன்பது சுகாய் விமானங்களுக்கு மாற்றாக புதிய விமானங்கள் ஆர்டர் செய்யப்படும்.