Day: February 21, 2019

Foc பெற்று தேஜாஸ் போர் விமானம் விமானப் படையில் இணைந்தது

February 21, 2019

இலகுரக போர் விமானமான தேஜாஸ்-ஐ, இந்திய விமானப் படையில் இணைப்பதற்கான ஒப்புதல் கிடைத்தது. ஏரோ இந்தியா என்ற போர் விமானங்கள் காட்சி பெங்களூருவில் நேற்று தொடங்கியது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த கண்காட்சியில் 22 நாடுகளின் 61 போர் விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனஇரண்டாவது நாளான இன்று இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானத்தை விமானப் படையில் இணைப்பதற்கான ஒப்புதல் சான்று வழங்கப்பட்டது. இந்தச் சான்றிதழை ராணுவ விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பானது விமானப் படை தலைமைத் தளபதி […]

Read More

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட “ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு பாகிஸ்தான் தடை”

February 21, 2019

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. காஷ்மீர் மாநிலம் புலவாமாவில் துணை ராணுவ படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 40 பேர் இறந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியா மட்டுமின்றி உலக தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு தான் காரணம் என இந்தியா குற்றம் சாட்டியது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான்தான் காரணம் என்று […]

Read More

பாதுகாப்பு படையினரின் பயணத்துக்கு விமான சேவை – மத்திய அரசு ஒப்புதல்

February 21, 2019

காஷ்மீரில் பணியில் அமர்த்தப்படும் படைவீரர்களை தனி விமானங்கள் மூலம் கொண்டுசெல்லும் திட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்காகவே, டெல்லி – ஜம்மு, டெல்லி – ஸ்ரீநகர், ஜம்மு – ஸ்ரீநகர் வழித்தடங்களில் இரு மார்க்கத்திலும் விமானம் இயக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு படையின் காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் அரசு செலவில் விமானத்தில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் பணியின் போதும், விடுமுறையின் போது வீடு […]

Read More

வீரமரணம் அடைந்த சுப்பிரமணியன் மனைவி, நாட்டுக்காக பணியாற்ற வேண்டும் : தூத்துக்குடி மாவட்ட நீதிபதி

February 21, 2019

ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த, சுப்பிரமணியனின் மனைவி, நாட்டுக்காக பணியாற்ற வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட நீதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சவலாப்பேரியை சேர்ந்த சி.ஆர்.பி.எப் வீரர் சுப்பிரமணியனின் குடும்பத்தினரை, அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் நீதிபதிகள் மற்றும் ஊழியர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர், ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் நிதி வழங்கினர்.  இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட முதன்மை நீதிபதி […]

Read More

பாகிஸ்தானுக்கு பாயும் நதிநீரை தடுத்து நிறுத்த முடிவு

February 21, 2019

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிநீரை தடுத்து நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய மந்திரி நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். இந்துஸ் நீர் ஒப்பந்தத்தின்படி ஜெலும், செனாப், இந்துஸ் நதி நீர் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் உற்பத்தியாகி பாகிஸ்தான் வழியாக சென்று அரபிக் கடலில் கலக்கும் இந்துஸ் நதியின் 80 சதவீத நீரை பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது. இந்தநிலையில், கடந்த 2016ம் ஆண்டு காஷ்மீரில் உள்ள உரி பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் இந்திய வீரர்கள் 18 […]

Read More

இஸ்ரேலுடன் நட்புறவை விரும்பும் பாகிஸ்தான்

February 21, 2019

இஸ்ரேலுடன் நட்புறவுடன் இருக்க விரும்புவதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் எதிரி நாடாக இருக்கும் பாலஸ்தீனத்துடன் பாகிஸ்தான் நீண்டகாலமாக நட்பு வைத்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேலுடன் நட்புறவை ஏற்படுத்திக்கொள்ள விரும்புவதாக தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி, இது இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நடைபெற்று வரும் மோதலுக்கு தீர்வுகாண உதவும் விஷயமாக இருக்கும் என தெரிவித்தார். காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Read More

புதிய F21 விமானங்களை இந்தியாவிற்கு அளிக்க லாக்ஹீடு மார்டின் விருப்பம்

February 21, 2019

புதிய F21 விமானங்களை இந்தியாவிற்கு அளிக்க லாக்ஹீடு மார்டின் விருப்பம் அமெரிக்காவின் போர் விமான தயாரிப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டீன்,((Lockheed Martin)) இந்தியாவுக்கான, பன்முகத் தன்மை கொண்ட F-21 அதிவேக போர் விமானத்தை தயாரித்து, அதுகுறித்த தகவல்களை வெளியிட்டிருக்கிறது. இந்தியாவுக்கு வழங்கவிருக்கும் அதிவேக போர் விமானங்களை, இந்தியாவிலேயே தயாரித்து வழங்கவும், அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டீன் நிறுவனம் அறிவித்திருக்கிறது. பன்முகத் தன்மை கொண்ட F-21 அதிவேக போர் விமானங்களை, டாடா குழுமத்தின், TaTa Advance Systems நிறுவனத்துடன், இணைந்து […]

Read More

ராணுவத்தில் சேர இளைஞர்கள் ஆர்வம்

February 21, 2019

காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள கண்டமுல்லா ராணுவ முகாமில் ராணுவத்துக்கு ஆட்கள் தேர்வு செய்யும் முகாம் நடைபெற்றபோது, கடும் குளிரையும், மழையையும் பொருட்படுத்தாமல் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வமாக வந்திருந்தனர். இது தொடர்பான வீடியோ ராணுவத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலை தள பக்கத்தில் வெளியானது. அதில், “நாட்டைக் காக்க ஏராளமான இளைஞர்கள் ராணுவத்துக்கான ஆட்கள் தேர்வில் கலந்துகொண்டு இருக்கின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது தந்தி டிவி

Read More

காஷ்மீர் தீவிரவாதிகள் மீண்டும் பெரிய தாக்குதலை நடத்த திட்டம் – உளவுத்துறை எச்சரிக்கை

February 21, 2019

இந்திய பாதுகாப்பு படையினருக்கு கடுமையான உயிர்ச்சேதம் ஏற்படுத்தும் வகையில் மீண்டும் மிகப்பெரிய தாக்குதல் நடத்த ஜெய்ஷே முகமது தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர். அண்மையில் காஷ்மீரில் நடைபெற்ற தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தால் நாடே கொதிப்படைந்து காணப்படும் சூழலில் இந்த எச்சரிக்கை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று தற்கொலைப்படைத் தீவிராதிகள் உள்பட 21 தீவிரவாதிகள் இதற்காக சதித்திட்டம் தீட்டி வருவதாகவும் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்ட உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதல் ஜம்மு காஷ்மீரில் நடைபெறுமா […]

Read More

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு உதவ தயார் இஸ்ரேல் அறிவிப்பு

February 21, 2019

இந்தியா மிக முக்கிய நட்பு நாடு எனவும், பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு உதவ தயாரக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான புதிய இஸ்ரேல் தூதராக ரோன் மல்கா நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:– காஷ்மீரில் இந்திய துணை ராணுவ படை வீரர்கள் மீதான தாக்குதல் கண்டத்துக்குரியது. வீரர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா, இஸ்ரேல் மட்டுமன்றி பல்வேறு உலக நாடுகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. பயங்கரவாதிகளை ஒடுக்க […]

Read More