2019-20 இராணுவ பட்ஜெட் 3 ட்ரில்லியன் ரூபாய்கள் – இதுவரை இல்லாத அளவு உயர்வு

2019-20 இராணுவ பட்ஜெட் 3 ட்ரில்லியன் ரூபாய்கள் – இதுவரை இல்லாத அளவு உயர்வு
2017ல் இங்கிலாந்தை வீழ்த்தி இராணுவத்திற்காக அதிகம் செலவு செய்யும் ஐந்தாவது நாடாக இந்தியா உருவெடுத்தது.
அந்த வருடம் 52.5 பில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டன.இது அதற்கு முந்தைய வருடம் ஒதுக்கப்பட்ட  $51.1 billion டாலர்களை விட அதிகம்.தொடர்ந்து இராணுவத்திற்கான நிதி அதிகரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் இங்கிலாந்தை பற்றி பார்க்கும் போது ( UK’s defence budget ) 2016ல் $52.5 billion ஆகவும்  அது 2017ல் குறைந்து $50.7ஆகவும் இருந்தது.
இந்தியாவிற்கு அணுசக்தி நாடுகளால் இருமுறை ஆபத்து இருந்து வருகிறது.
இந்தியா தனது இராணுவத்தை நவீனப்படுத்தி மேலும் கட்டுமானங்களை ஏற்படுத்த
( military capabilities and infrastructure) அதிக நிதியை செலவிடுகிறது.இந்தியாவின் எதிரியாக பார்க்கப்படும் சீனா அமெரிக்காவிற்கு அடுத்து இராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கும் நாடாக உள்ளத.
சீனா  2016-17ம் கால அளவில் இராணுவத்திற்கான நிதியை 25% அதிகரிக்க இந்தியா  2.4% அதிகரித்தது.
2000ம் ஆண்டு முதல் சீனா அதிக அளவு  submarines, destroyers, frigates மற்றும் corvettes கப்பல்களை கட்டி வருகிறது.இது இந்தியா,ஜப்பான் மற்றும் தென்கொரிய நாடுகள் கட்டிய மொத்த கப்பல்களை விட அதிகம்.
மேலும் தென்சீன கடல் பிராந்தியத்தில் அமெரிக்காவை வீழ்த்த அந்த பகுதியை இராணுவமயமாக்கி வருகிறது.
சீன விமானப் படையில் 1,200 tactical aircrafts இருக்கும் வேளையில் இந்தியாவிடம் 750 தான் உள்ளது.இந்தியாவை விட
55 என்ற அளவில் அதிக frigates, cruisers மற்றும் destroyers களை சீனா வைத்துள்ளது.
இந்திய இராணுவத்தில் பலம் inadequate logistics, மற்றும் shortages of ammunition மற்றும் spare parts காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.தற்போது இவற்றை களைய மாபெரும் நவீனப்படுத்தல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சில புரோஜெக்டுகள் தாமதம் மற்றும் நிதி சுமை காரணமாக தடைபட்டு உள்ளன என்பதும் மறுக்க முடியாத விசயமாக உள்ளது.
முதலாம் இடத்தில் அமெரிக்காவும் இரண்டாம் இடத்தில் சீனாவும் இருக்கு இரஷ்ய நான்காம் இடத்தில் உள்ளது.$61.2 billion டாலர்களை தனது இராணுவத்திற்கு இரஷ்யா செலவு செய்கிறது.
மூன்றாம் இடத்தில் சௌதி அரேபியா உள்ளது.அது தனது இராணுவத்திற்காக $76.7 billion டாலர்களை செலவு செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published.