பிரான்ஸ் தயாரிப்பான மிராஜ் 2000 விமானம் : ஒரு பார்வை
இந்தியாவின் மிராஜ் விமானம் கொள்முதல் குறித்து நான் அடிக்கடி கேள்விப்பட்ட விசயம் அன்றையை இராணுவ பட்ஜெட்டை விட இந்த கொள்முதல் ஒப்பந்தத்திற்கான பணம் அதிகமென.விமானப் படைக்கு மிராஜ் 2000 பிடித்துவிட்டது.அதன் திறன் பிடித்துவிட கொள்முதல் செய்ததாக தகவல் படித்த நியாபகம்.
மிராஜ் ஒரு பலபணி ஒற்றை என்ஜின் கொண்ட நான்காம் தலைமுறை விமானம்.இது பிரான்சின் டஸ்ஸால்ட் நிறுவனத் தயாரிப்பு.என்னது ? ஆம்..நாம் தற்போது வாங்கியுள்ள ரபேல் விமானத்தை தயாரிக்கும் அதே டஸ்ஸால்ட் நிறுவனம் தான்.
1970களில் பிரான்ஸ் விமானப்படையின மிராஜ் 3 விமானங்களுக்கு மாற்றாக இந்த மிராஜ் 2000 விமானங்களை டஸ்ஸால்ட் மேம்படுத்தியது.
இதுவரை உலகின் பல முன்னனி நாடுகளான யுஏஇ,தைவான் மறறும் இந்தியா போன்ற நாடுகள் இந்த விமானத்தை கொள்முதல் செய்துள்ளன.
அமெரிக்கா பாகிஸ்தானுக்கு எப்-16 விமானங்களை விற்க தொடங்கிய போது இந்தியாவும் பிரான்சுடன் மிராஜ் கொள்முதல் குறித்து பேச தொடங்கியது.
அக்டோபர் 1982ல்
36 single-seat Mirage 2000H மற்றும் 4 twin-seat Mirage 2000THs (with Hstanding for “Hindustan”) வாங்கியது.
கார்கில் போரின் போது ஆகச் சிறப்பாக செயல்பட்டு தான யார் என்பதை நிரூபித்தது.மிராஜ் வெறும் 4 முறை மட்டுமே விபத்தை சந்தித்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.இது அதன் நம்பகத்தன்மையை குறிக்கிறது.
தற்போது கிட்டத்தட்ட 41விமானங்கள் விமானப்படையில் உள்ளது.
மணிக்கு 2,336 km வேகத்தில் செல்லக்கூடிய மிராஜ் கிட்டத்தட்ட 1,550 km வரை செல்லக்கூடியது.9 ஹார்டுபாயிண்டுகள் உதவியுடன் நிறைய வகையான ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடியது.
14மீ நீளமும் ஐந்து மீ உயரமும் கொண்டது.ஒரு விமானி இயக்கும் வகையிலானது.
தரைத் தாக்குதலை மிகத் துல்லியமாக நடத்தக்கூடிய நம்பகத்தன்மை வாய்ந்த இந்த விமானத்தை தாக்குதலுக்கு விமானப்படை பயன்படுத்தியதில் ஆச்சரியமல்ல.
பழைய மிராஜ் விமானங்களே இந்த அளவு தாக்குதல் நடத்த முடியும் என்றால் சுகாய் மற்றும் வரஉள்ள ரபேல் விமானத்தின் திறனை பாருங்கள்.
இந்த இடத்தில் நாம் ஒன்றை மறக்கிறோம்..என்றைக்கும் இயந்திரம் முக்கியமல்ல அந்த இயந்திரத்தை யார் இயக்குகிறார்கள் என்பது தான் முக்கியம்…நமது விமானப்படை விமானிகளின் திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது.இந்த வாய்ப்புக்காக தான் விமானப்படை காத்திருந்ததது.