Breaking News

Day: February 15, 2019

காஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த தூத்துக்குடி வீரருக்கு நாளை இறுதிச்சடங்கு!

February 15, 2019

காஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த தூத்துக்குடி வீரர் சுப்பிரமணியத்தின் உடல் நாளை அடக்கம் செய்யப்படும் என தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 38 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த கொடூர தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் உயிரிழந்த வீரர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் வீரமரணமடைந்தனர். […]

Read More

புல்வாமா தாக்குதல் : பாக். தூதரை அழைத்து எதிர்ப்பை பதிவு செய்தது இந்தியா

February 15, 2019

புல்வாமா தாக்குதல் : பாக். தூதரை அழைத்து எதிர்ப்பை பதிவு செய்தது இந்தியா ஜம்மு, காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபூராவில், நேற்று ஜெய்ஸே இ முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஜம்மு, காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபூராவில், நேற்று ஜெய்ஸே இ முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை […]

Read More

“மீன் விற்றல் முதல் ராணுவ வீரர் வரை” மேற்குவங்க வீரரின் போராட்ட வாழ்க்கை

February 15, 2019

“மீன் விற்றல் முதல் ராணுவ வீரர் வரை” மேற்குவங்க வீரரின் போராட்ட வாழ்க்கை புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களில் பாப்லு சந்த்ரா என்பவரும் ஒருவர். மேற்குவங்க மாநிலத்தின் ஹவுரா மாவட்டத்தில் உள்ள இவரது பௌரியா கிராமமே தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளது. பாப்லு சந்த்ரா இறந்துவிட்டார் என்பதையே நம்ப முடியாமல் அவரது தாய் பனாமலி மற்றும் மனைவி மிதா தவித்துள்ளனர். அவரது இல்லத்திற்கு கிராம மக்கள் பலரும் வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். கணவர் இறந்த செய்தி […]

Read More

இந்தியாவின் முயற்சிக்கு மீண்டும் முட்டுக்கட்டை: மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அங்கீகரிக்க சீனா மறுப்பு

February 15, 2019

இந்தியாவின் முயற்சிக்கு மீண்டும் முட்டுக்கட்டை: மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அங்கீகரிக்க சீனா மறுப்பு பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் மூலம் அறிவிக்கக் கோரும் இந்தியாவின் முயற்சிக்கு ஆதரவு அளிக்க முடியாது என்று சீனா மீண்டும் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் நேற்று சிஆர்பிஎஃப் வீரர்கள்  பயணித்த பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார். […]

Read More

மறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம்! பயங்கரவாதிகளுக்கு சிஆர்பிஎப் சவால்

February 15, 2019

மறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம்! பயங்கரவாதிகளுக்கு சிஆர்பிஎப் சவால் மறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம் என்று பயங்கரவாதிகளுக்கு சிஆர்பிஎப் சவால் விடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 42 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். படுகாயம் அடைந்த பல வீரர்கள் இன்னும் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புல்வமா தாக்குதல் நாடு முழுவதும் […]

Read More

உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம்’ – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

February 15, 2019

‘உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம்’ – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் உடனடியாக வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட இந்திய பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் பழனிசாமி, “பயங்கர தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் பலர் உயிரிழந்த செய்தியை அறிந்து வேதனை அடைந்தேன். […]

Read More

பாக்.,ன் வர்த்தக அந்தஸ்து ரத்து : இந்தியா

February 15, 2019

பாக்.,ன் வர்த்தக அந்தஸ்து ரத்து : இந்தியா புல்வாமா பயங்கரவாத தாக்குதலை அடுத்து பாக்., உடனான வர்த்தக அந்தஸ்தை ரத்து செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது. காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது, வெடிபொருட்கள் நிரப்பிய வாகனத்தை மோத செய்து பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு குறித்த மத்திய அமைச்சரவை குழு கூட்டம் டில்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு […]

Read More

என் மகன் இறந்துட்டான், இன்னொரு மகனை அனுப்புவேன், பதிலடி கொடுப்போம்” – தந்தையின் கோபம்

February 15, 2019

“என் மகன் இறந்துட்டான், இன்னொரு மகனை அனுப்புவேன், பதிலடி கொடுப்போம்” – தந்தையின் கோபம் பீகார் மாநிலத்தின் பாகல்பூரைசேர்ந்த ரத்தன் தாகூர் என் மகனை பயங்கரவாதிகள் கொண்டுவிட்டார்கள் பழிதீர்க்க இன்னொரு மகனை போர்களத்திற்கு அனுப்புவேன் என கூறியுள்ளார். என் மகன் இறந்துட்டான், இன்னொரு மகனை அனுப்புவேன், பதிலடி கொடுப்போம்” – தந்தையின் கோபம்பயங்கரவாத தாக்குதலில் தன் மகன் இறந்த நிலையில், இன்னொரு மகனை அனுப்பி பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பேன் என சி.ஆர்.பி.எப் வீரரின் தந்தை கூறியிருப்பது அனைவரையும் […]

Read More

பாகிஸ்தானிற்கு பயணம் மேற்கொள்வதை அமெரிக்கர்கள் தவிர்க்க வேண்டும் : அமெரிக்கா நிர்வாகம் கடும் எச்சரிக்கை

February 15, 2019

பாகிஸ்தானிற்கு பயணம் மேற்கொள்வதை அமெரிக்கர்கள் தவிர்க்க வேண்டும் : அமெரிக்கா நிர்வாகம் கடும் எச்சரிக்கை பாகிஸ்தானில் தீவிரவாத நடவடிக்கைகள் பெருகி வருவதால் அந்நாட்டுக்கு செல்வதை அமெரிக்க மக்கள் தவிர்க்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் இயங்கி வரும் தீவிரவாத அமைப்புகள் அங்கு பல்வேறு சதித் திட்டங்களை அரங்கேற்ற திட்டமிட்டுள்ளது. எனவே அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் முடிவை அமெரிக்கர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அமெரிக்க விமான போக்குவரத்துத் துறை அறிவுறுத்தி உள்ளது. குறிப்பாக […]

Read More

“என் மகன் இறந்துவிட்டானா..?”வலியுடன் கேட்கும் சுப்ரமணியனின் தந்தை

February 15, 2019

“என் மகன் இறந்துவிட்டானா..?”வலியுடன் கேட்கும் சுப்ரமணியனின் தந்தை தனது மகன் காயபட்டுள்ளானா ? அல்லது இறந்துவிட்டானா ? என தூத்துக்குடி சுப்ரமணியனின் தந்தை வலியுடன் கேட்டிருப்பது, அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜம்மு – காஷ்மீரில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட இந்திய பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் இந்திய உட்பட உலகம் முழுவதும் எதிரொலித்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உட்பட உலக நாடுகள் பலவும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தியப் பிரதமர் […]

Read More