எல்லையில் 12 இடங்களில் பாக்., அத்துமீறி தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் எல்லையில், கிராம மக்களை கேடயமாக பயன்படுத்தி, 12க்கும் மேற்பட்ட இடங்களில் பாக்., அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர்கள் 5 பேர் காயமடைந்தனர்.

ஜம்மு – காஷ்மீரில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பழி வாங்கும் வகையில், நேற்று அதிகாலை, பாக்.,கின் பாலகோட் பகுதியில், ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம் மீது, இந்திய விமானப்படை விமானங்கள், குண்டுமழை பொழிந்து அதிரடி தாக்குதல் நடத்தின. இதில், 350 பயங்கரவாதிகள் உடல் சிதறி பலியாகினர்.

இந்தியாவின் தாக்குதலையடுத்து ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி பகுதியில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் பாக்., அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. கிராம மக்களை கேடயமாக பயன்படுத்தி இத்தாக்குதலை பாக்., நடத்தி வருகிறது. கிராம மக்களின் வீடுகளில் இருந்து ஏவுகணைகள், சிறிய ரக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய வீரர்கள் 5 பேர் காயமடைந்தனர். கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல், பாக்., ராணுவத்துக்கு இந்திய வீரர்கள் பதிலடி தந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.